பக்கம் : 920
 

     பொன்கட்டிலிற் பரப்பிய பூம்படுக்கை மிசையிருந்து அன்னம் போன்ற மகளிர்கள்
அடிவருடப் பள்ளிகொள்ளற்குரிய நீ அதனை ஒழிந்து மதயானை நெற்றியின் மிசை
முடிசாய்த்து ஒன்றும் உரையாதே துயிலுதல் உனக்குப் புகழாமோ என்றார் என்க.

 (346)

 
1477. மகரப் பைம்பூண் மடவார்கள்
     வயிரக் குழையும் பொற்றோடும்
தகரக் குழலு 1மெழினுதலுந்
     திருத்திப் பயின்ற தாழ்தடக்கை
சிகர மனைய மதயானைச்
     செவிமேற் சரிந்து செங்குருதி
பகரக் கழுகு பாராட்டக்
     கிடத்த றகுமோ படைவேந்தே.
 
     (இ - ள்.) மகரப் பைம்பூண்மடவார்கள் - மகரமீன் வடிவினவாய்ச் செய்த
அணிகலனுடைய மகளிர்களின், வயிரக்குழையும் - வயிரமணி அழுத்திய தோடும்,
பொற்றோடும் - பொன்னாலியன்ற தோடும், தகரக்குழலும் - மயிர்ச்சந்தன
மணமூட்டப்பெற்ற கூந்தலும், எழில் நுதலும் - அழகிய நெற்றியும், ஆகிய இவையிற்றை,
திருத்திப் பயின்ற - சீர்திருத்திப் பழகிய, தாழ்தடக்கை - முழந்தாளளவும் நீண்டு
தொங்குகின்ற வலிய கைகள், சிகரமனைய மதயானை செவிமேல் - மலைச்சிகரத்தை ஒத்த
நினது மதயானையினுடைய செவியின்மேல், சரிந்து - சாய்ந்து, செங்குருதி பகர - சிவந்த
குருதி பாயா நிற்ப, கழுகு பாராட்ட - கழுகுகள் புகழ்ந்து வாழ்த்த, கிடத்தல் தகுமோ -
இங்ஙனம் கிடப்பது தகுதியாமோ கூறாய், படைவேந்தே - படைமிக்க வேந்தனே, (எ - று.)

     பகர்தல் - விளைதல் - குருதிவிளைதலாவது பாய்தல்.

     மகளிர்களின் குழையும் தோடும் குழலும் நுதலும் திருத்திப் பயின்ற உன் தடக்கை
மதயானையின் செவிமேலே சரிந்து கிடப்ப, கழுகுகள் பாராட்ட நீ இவ்வாறு கிடத்தல் உன்
பெருமைக்குத் தகுதியோ என்றார் என்க.

(347)

 
1478. வெய்ய சுடரோன் றண்கதிரோ
     னெனவீங் கிவர்கண் மதிலியங்கார்
பைய வந்து தாமரையின்
     பரவைத் தடத்து மாளிகைமேல்
 

     (பாடம்) 1 மளகமும்.