பக்கம் : 921 | | | ஐய தலத்து 1மெலவிரிந்த 2தயலார் செல்லு மாணையாய் செய்ய குருதிச் சேறாடிச் சிறுமா னிடர்க்கே தோற்றாயே. | (இ - ள்.) வெய்ய சுடரோன் - வெவ்விய ஞாயிறும், தண் கதிரோன் - குளிர்ந்த திங்களும், என ஈங்கு இவர் - என்னும் இத்தேவர்கள், மதில் இயங்கார் - நினது அரண்மனை மதிலிற்கு மேலே அஞ்சி இயங்காதவராய், பையவந்து - மெல்லவந்து, தாமரையின் பரவைத்தடத்தும் - உனது தாமரைமிக்க அகன்ற பொய்கையின் கண்ணும், மாளிகைமேல் ஐய தலத்தும் - உனது மாளிகையின் மேனிலை மாடத்தே அழகியவாய நிலாமுற்றங்க ளிடத்தும், மெல விரிந்து - மெல்லத் தம்மொளியை விரித்து, அது அயலார் - அம்மாளிகையிடத்துப் பக்கத்தாராய்ச், செல்லும் - செல்லுதற்குக் காரணமான, ஆணையாய் - ஆணைச்சக்கரத்தை உடையோனே, செய்ய குருதிச் சேறாடி - சிவந்த குருதிச்சேற்றிலே குளித்து, சிறு மானிடர்க்கு - சிறுமையுடைய மனிசருக்கோ, தோற்றாய், தோற்கலானாய், ஏ : அசை, (எ - று.) ஞாயிறும், திங்களும் உன் ஆணைக்கஞ்சி, உன் மதின் மேலியங்காதவராய், நீ விரும்பியபடி உனது பொய்கையிடத்தும், நிலாமுற்றத்தும், மெல்ல வந்து தம்மொளியை விரித்து, அவற்றின் அயலே இயங்கா நிற்பர், அத்தகைய ஆற்றலுடைய நீ, பொள்ளல் யாக்கைச் சிறு மானிடர்க்குத் தோற்றாய் என்றல், தகுதியோ என்றார் என்க. ஞாயிறுந் திங்களும், பொய்கை யிடத்தும், நிலாமுற்றத்தும் என்றதனை முறை நிரல்நிறையாகக் கொள்க. | (348) | | 1479. | பணங்கொ ணாகம் பலசூழ்ந்து பகல்செய் மணியின் சுடரேந்தி அணங்கி யகலா துழைநிற்கு மாணை யுடைய வடல்வேந்தே வணங்கி வந்து பலதெய்வம் வழிபா டாற்று மறைநேமிக் குணங்கொள் படையாய் கூடாரு முளரோ நினக்குக் கோமானே. | |
| (பாடம்) 1மேல்விரிந்த.2 தலராச். | | |
|
|