பக்கம் : 922 | | (இ - ள்.) பணங்கொள் நாகம் பலசூழ்ந்து - படத்தையுடைய நாகம் ஆகிய பவணதேவர்கள் பலர், நினக்கஞ்சி நின்னைச் சூழநின்று, பகல் செய்மணியின் சுடர் ஏந்தி - பகலைச் செய்கின்ற தங்கள் மணியாகிய விளக்கை ஏந்தினராய், அணங்கி - வருந்தியும், அகலாது - நின் ஆணை கடந்து செல்ல அஞ்சி நீங்காதவராய், உழை நிற்கும் ஆணையுடைய - நின் பக்கத்தே நிற்றற்குக் காரணமான ஆணை ஆற்றலுடைய, அடல்வேந்தே - வெற்றியையுடைய வேந்தனே, வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு ஆற்றும் - வணக்கத்துடனே நின் குறிப்பின் வழிவந்து நினக்கு இங்ஙனம் பல தெய்வங்கள் வழிபாடு செய்கின்ற, மறைநேமி - மந்திர மொழியையுடைய சக்கரமாகிய, குணங்கொள் படையாய் - குணமிக்க படையை ஏந்துபவனே, கூடாரும் நினக்கு உளரோ - நீ போதற்குரிய பகைவரும் அத்தேவர் உலகில் இன்னும் உனக்கு உளராகின்றனரோ உரையாய், கோமானே - எங்கள் தலைவனே, (எ - று.) பவணதேவராகிய நாகரும் நினக்கு அஞ்சி அகலாது மணிவிளக்கேந்தி நிற்பர், வேறு பல தேவர்களும் உன்னை வழிபட்டொழுகாநிற்பர், ஆழிப்படையுடைய நினக்குப் பகையாவார் அத்தேவரில் யாருளர் என்றார் என்க. (உளராயினன்றோ நீ அங்குச் செல்லவேண்டும் என்றபடி.) | (349) | | 1480. | பெருமா மழைக்கண் மாதேவி பிணையின் மாழ்கி யிவணழிய வருமா முரசம் பிறர்பெயர்கொண் டறைய வாழி யயனீங்கத் திருமா 1நகரஞ் செல்வ முற்றுஞ் சிதையக் கண்டுஞ் சீறாயால் உருமா லென்னுந் திறலினா யுலகம் வேண்டா 2தொழிந்தாயே. | (இ - ள்.) பெருமா மழைக்கண் மாதேவி - பெரிய கரிய குளிர்ந்த கண்களையுடைய உன் கோப்பெருந்தேவி, பிணையின் மாழ்கி - மான்பிணை போலே வருந்தி, இவண் அழிய - இவ்விடத்தே உயிர் நீப்பவும், வரும் மாமுரசம் - முழக்கி வருகின்ற பெரிய வெற்றிமுரசமானது, பிறர் பெயர்கொண்டு - உனது பகைவர்களின் பெயர்களை மேற்கொண்டு, அறையா - முழக்கா நிற்கவும், ஆழி - உனது சக்கரப்படை, அயனீங்க - உன் மாற்றானிடத்தே செல்லா நிற்பவும், திருமா நகரம் - உனது இரத்தின பல்லவ நகரத்தின்கண், செல்வம் முற்றும் சிதைய - நீ படைத்த நிதி முழுதும் சிதைந்தொழியவும், கண்டும் - இவையிற்றை நீ நேரிற் கண்டு வைத்தும், சீறாயால் - ஒரு சிறிதும் சினந்தாயில்லை, உரும் என்னும் திறலினாய் - இடியேறு போன்ற ஆற்றலுடையோனே, உலகம் வேண்டாது ஒழிந்தாயோ - இவ்வுலக வின்பத்தை முழுமுற்றும் வெறுத்து விட்டு்ச் சென்றுவிட்டாயோ, கூறாய், (எ - று.) |
| (பாடம்) 1 நகரும். 2 தொழிந்தாயோ. | | |
|
|