பக்கம் : 924 | | | 1482. | தொழுதுஞ் சூழ்ந்து மடிபற்றித் தொடர்ந்துஞ் சுரும்புண் 1கோதைநிலை வழுவ மயங்கி மாழாந்து மருண்டுந் தெருண்டு மடவார்கள் அழுத கண்ணீ ரகன்ஞாலத் தரச ருருக வருவியாய் ஒழுக நெடுமான் முனிவென்னு மூழித் தீயு மவிந்ததே. | (இ - ள்.) தொழுதும் - அச்சுவகண்டனை வணங்கியும், சூழ்ந்தும் - அவனுடைலைச் சூழ்ந்துகொண்டும், அடிபற்றித் தொடர்ந்தும் - அவன் அடிகளை ஒருவர்பின் ஒருவராய்த் தொடர்ந்து பிடித்தும், சுரும்புண் கோதை நிலை வழுவ மயங்கி - வண்டுகள் தேன்பருகும் தம் மலர்மாலைகள் நிலையினின்றும் வழுவி வீழுமாறு மயக்கம் எய்தியும், மாழாந்தும் - துயரத்தே அழுந்தியும், மருண்டும் - வியப்புற்றும், தெருண்டும் - சிறிது தெளிவுற்றும், மடவார்கள் - அச்சுவகண்டன் மனைவிமார்கள், அழுத கண்ணீர் - அழுதலாலே பெருகிய கண்ணீர், அகன் ஞாலத்து அரசர் உருக - விரிந்த உலகத்தை ஆளும் பகைவேந்தருடைய உள்ளத்தையும் உருகச்செய்து, அருவியாய் - மலையருவி போலே, ஒழுக - மிக்குப் பாயாநிற்ப, நெடுமால் - திவிட்ட நம்பியினுடைய, முனிவென்னும் - சினம் என்று கூறப்படுகின்ற, ஊழித் தீயும் - உலகை அழிக்கும் நெருப்பும், அவிந்தது ஏ - அவியலாயிற்று, (எ - று.) மடவார்கள் சூழ்ந்தும் தொடர்ந்தும் மயங்கி மாழாந்தும் மருண்டும் தெருண்டும் அழுதகண்ணீர் அரசர் உளமுருக்கி அருவியாய்ப் பாயா நிற்ப, நம்பியின் சினம் என்னும் ஊழித்தீயும் அவியலாயிற்று என்க. | (352) | | அச்சுவகண்டன் உடலைத் தீயிலிடல் | 1483. | மஞ்சு தோயும் வரையார்த மன்னன் றன்னை மதயானை 2அஞ்சு தோன்ற நுதலினிழித் தந்த ணாளர் மெய்தீண்டிப் பஞ்சுந் துகிலும் பூம்பட்டும் பாயபள்ளி படுத்ததன்மேல் வஞ்ச மில்லாப் புகழானை வயங்கு செந்தீ வாய்ப்பெய்தார். | |
| (பாடம்) 1கோதையும். 2மஞ்சு. | | |
|
|