பக்கம் : 927 | | | சுரிவளர் குஞ்சிமேற் சொரிந்த பூமழை வரிவளை முரசொடு மயங்கி யார்த்தவே. | (இ - ள்.) எரிவளர் ஒளிதரு நேமி எய்திய - தீப்பிழம்பு எரிந்தாற்போலே ஒளி பரப்புகின்ற ஆழிப்படையை அடைந்த, திருவளர் படர்ஒளி செங்கண் மாலவன் - செல்வம் மிக்க பரவிய புகழையுடைய சிவந்த கண்களோடு கூடிய திருமாலாகிய திவிட்டனது, சுரிவளர் குஞ்சிமேல் - சுரிந்து வளர்ந்த தலை மயிர்க் கற்றையின் மேலே, பூமழை சொரிந்த - மலர்மாரி பெய்தன, வரிவளை முரசொடு மயங்கி ஆர்த்த - வரிகளையுடைய சங்குகள் முரசுகளோடே கலந்து முழங்கின, (எ - று.) பூமழை தேவர் சொரிந்தார்; வளையும் முரசும் படைஞர் முழக்கினர் என்க. திவிட்டநம்பியின் வெற்றி குறித்துத் தேவர்கள் மலர் மாரி பெய்தனர். யாண்டும் வெற்றிச்சங்கும் வெற்றிமுரசும் முழங்கின என்க. | (356) | | வான் தருமொழி (அசரீரி வாக்கு) | 1487. | அரிதினி னவனெய்த தெய்வ வம்புக ளுரிதினி னறுத்தொளிர் நேமி கொண்டது பெரிதிது சித்திர மென்று பேரொலி விரிதரு விசும்பிடை விரவி 1நின்றதே | (இ - ள்.) அரிதினின் அவன் எய்த தெய்வ அம்புகள் - விலக்கரியதோர் ஆற்றானே அவ்வச்சுவகண்டன் விடுத்த கடவுட் டன்மையுடைய அம்புகளை, உரிதினின் - தனக்குரிய அம்பினாலே, அறுத்து - அறும்படி மாற்றி, ஒளிர் நேமி கொண்டது இது - திகழுகின்ற அவனது ஆழிப்படையைத் தனதாக்கிக் கொண்ட இச்செய்கை, பெரிது சித்திரம் - பெரிதும் வியத்தற்குரியதாயிருந்தது, என்று - என்று கூறியதோர், பேரொலி - பெரிய முழக்கம், விரிதரு விசும்பிடை - அகன்ற வான்முழுதும், விரவி நின்றதே - பரவி நிற்பதாயிற்று, (எ - று.) அச்சுவகண்டன் விடுத்த தடுத்தற்கரிய தெய்வக் கணைகளைத் தடுத்து அவனது ஆழிப்படையைத் தனதாக் கொண்டேவிய செயல் வியப்புடைத்தென்று வான்மொழி கூறிய பேரொலி விசும்பு முழுதும் பரவிற் றென்க. | (357) | | விச்சாதரர் திவிட்டனை வணங்குதல் | 1488 | வெஞ்சினஞ் செருக்கொடு வீய மானமும் விஞ்சைய ரொழிந்தன ரொழிந்து வீரனை |
| (பாடம்) 1 நின்றவே. | | |
|
|