பக்கம் : 928 | | | மஞ்சிவர் மணிவரை வண்ண வாழிய வஞ்சினம் பெரிதென வடிவ ணங்கினார். | (இ - ள்.) வெஞ்சினம் செருக்கொடு வீய - வெவ்விய வெகுளி தம் இறுமாப்புடனே இறந்துபட, மானமும் - தங்கள் அணியாய மானத்தையும், விஞ்சையர் ஒழிந்தனர் - விச்சாதரர்கள் விட்டொழித்தனராயினர், ஒழிந்து - அங்ஙனம் விட்ட பின்னர், வீரனை - திவிட்ட நம்பியை, மஞ்சிவர் மணிவரை வண்ண - முகில் தவழும் மரகதமலை போன்ற வண்ணமுடைய திவிட்ட நம்பியே, வாழிய - நீ நெடிது வாழ்வாயாக, பெரிது அஞ்சினம் என - அடியேங்கள் பெரிதும் அடிகட்கு அஞ்சா நின்றோம் என்று கூறி, அடி வணங்கினார் - அவனடிகளிலே வீழ்ந்து வணங்குவாராயினர், (எ - று.) மானமற்ற சில வித்தியாதரர் திவிட்டனை வணங்கி நீ வாழிய நினக்கு யாங்கள் அஞ்சினேம்; எம்மைக் காப்பாற்றுக என வணங்க லாயினர் என்க. | (358) | | | விச்சாதரர்தம் உத்தரசேடியிலேயே வாழ்க என்று முரசறைதல் | 1489. | அஞ்சிய மன்னர்கட் கருளி யாயிடைத் துஞ்சிய மன்னவன் 1றமரந் தோமில்சீர் விஞ்சைய ருலகினின் மீண்டு வாழ்கென வெஞ்சலில் கடிமுர சறைய வேயினான். | (இ - ள்.) அஞ்சிய மன்னர்கட்கு - அஞ்சித் தன்னடிகளிலே தஞ்சம்புகுந்த விஞ்சை வேந்தர்க்குப் புகலாகி, அருளி - அருள் செய்து, ஆயிடை - அப்பொழுதே, துஞ்சிய மன்னவன் தமரம் - இறந்தொழிந்த அச்சுவகண்டனுடைய உறவினர் ஆகியோர் எல்லோரும், தோமில் சீர் விஞ்சையர் உலகினில் - குற்றமற்ற சிறப்பினையுடைய தமக்குரிய விச்சாதர உலகத்தே, மீண்டு வாழ்க - மறுபடியும் இனிதே வாழக்கடவர், என - என்று அறிவித்து, எஞ்சலில் கடிமுரசு அறைய - குறைவில்லாத கடிப்பினையுடைய முரசத்தை முழக்குதற்கு, ஏயினான் - கட்டளையிட்டருளினான், (எ - று.) நம்பி அவ்வாறு அடைக்கலம் புக்க விச்சாதரருக்கு அருள் செய்து அச்சுவகண்டன் சுற்றத்தார் அனைவரும் உத்தர சேடிக்கட் சென்று பண்டுபோல் வாழக் கடவீர் என முரசறையுங்கோள் எனப் பணித்தான் என்க. | (359) |
| (பாடம்) 1 றமருந். | | |
|
|