பக்கம் : 931 | | முடிசூட்டு விழா முரசறைதல் | 1494. | என்றவன் மொழிதலு மிலங்கு நீண்முடி மின்றவ ழவிரொளி விஞ்சை வேந்தனோ டொன்றிய வரசர்க ளுவந்து 1கூறினார் அன்றவர்க் கரசியின் முரச மார்த்தவே. | (இ - ள்.) என்று அவன் மொழிதலும் - என்று அப் பயாபதி வேந்தன் கூறியவுடனே, இலங்கு நீள்முடி - திகழ்கின்ற நீண்டமுடியையும், மின் தவழ் அவிர் ஒளி - மின்னலைப் போன்று தவழ்ந்தொளிரும் இயற்கை ஒளியையும் உடைய, விஞ்சை வேந்தனோடு - சடி மன்னனோடே, ஒன்றிய அரசர்கள் - பொருந்திய ஏனை மன்னர்களும், உவந்து - பெரிதும் மகிழ்ந்து, கூறினர் - வழி மொழிந்து நின்றனர், அன்று - அற்றை நாளிலேயே, அவர்க்கு - விசயதிவிட்டரின் முடிசூடற் பொருட்டு, அரசியல் முரசம் - அரசியற் செய்தியை அறிவிக்கும் முரசம், ஆர்த்தவே - முழங்கின (எ - று.) கூறினார் என்றது வழிமொழிந்தனர் என்றவாறு. தன் மக்களின் முடிசூட்டு விழாவினையும் காண விரும்புகின்றேன் என்று பயாபதிமன்னன் கூறியவுடன் சடிமுதலிய வேந்தர்களும் வழி மொழிந்தனர். அவ்வழி அன்றே முடிசூட்டு விழாவினை முரசறைந்து நகர்க்கு அறிவித்தனர் என்க. | (364) | | விசயதிவிட்டரை மங்கல நீராட்டல் | 1495. | கங்கையுஞ் சிந்துவு2ங் கருது மாநதி 3தங்குநீ ரெனையவுந் தந்து தாமரை பொங்கிய முகத்தபொற் 4குடங்க ளாற்பல மங்கல மரபினான் மன்ன ராட்டினார். | (இ - ள்.) கங்கையும் சிந்துவும் - கங்கைப் பேரியாற்றினும் சிந்துப் பேரியாற்றினும், கருதும் மாநதி - இன்னோரன்ன தெய்வத்தன்மையுடையவாய்க் கருதப்படும் பிற பேரியாறுகளினும், தங்குநீர் எனையவும் - பொருந்திய நீர் எத்துணையும், தந்து - கொணர்ந்துதரப்பட்டு, பொங்கிய தாமரை முகத்த - மலர்ந்த தாமரை வடிவிற்றாய்ச் செய்யப்பட்ட முகத்தையுடைய, பொற்குடங்களால் - பொன்னாலியன்ற குடங்களாலே, பல மங்கல மரபினால் - பலவாகிய மண்ணுமங்கல முறைகளாலே, மன்னர் - வேந்தர்கள், ஆட்டினார் - விசயதிவிட்டர்களை மங்கல நீராட்டினர், (எ - று.) |
| (பாடம்) 1 சூட்டினார். 2மென்னு. 3தங்கிய தடத்துள்நீர். 4 கடங்க. | | |
|
|