பக்கம் : 937
 
 

சுருங்கலில் கருடற்குச் சுடருந் தோன்றலாற்
பெருங்கலி மாளிகை பேணப் பட்டதே.
 

     (இ - ள்.) அருங்கலப் பெருந்தெய்வம் அவையும் - அருங் கலங்களாகிய சங்குசக்கர
முதலியனவும், தத்தமக்கு ஒருங்கு செய் வளநகர் அடைந்த - தத்தமக்குத் தனித்தனியாக
ஒரே இடத்தில் இயற்றப்பட்ட வளப்பமிக்க கோயில்களை எய்தின, ஒண்சிறை சுருங்கல்இல்
கருடற்கு - ஒளிமிக்க சிறகுகளுடனே ஆற்றல்குறைதலில்லாத கருடனுக்கும், சுடரும்
தோன்றலால் - திகழ்கின்ற திவிட்டநம்பியாலே, பெருங்கலி மாளிகை - பெரிய விழா
ஆரவாரத்தினையுடைய கோயில், பேணப்பட்டதே - எடுத்துப் போற்றப்பட்டது, (எ - று.)

     கலி - விழாவார வாரம் என்க.

     சங்கம் முதலிய அருங்கலங்கட்கும் ஓரிடத்தே தனித்தனி கோயில்
எடுக்கப்பட்டனவாகலின் அவை அக் கோயில்களை எய்தின : கருடற்கும் கோயில்
நம்பியால் எடுக்கப்பட்டதென்க.

(375)

 

திவிட்டன் அவையில் புலவர்கள் வரலாறு கூறுதல்

1506. முரசுவீற் றிருந்ததிர் மூரித் தானைய
னரசுவீற் றிருந்தனன் பின்னை யாயிடைக்
கரைசெய்நீர்க் கருங்கடல் வேலி காவலற்
குரைசெய்நூற் சரிதைகள் புலவ ரோதினார்.
 
     (இ - ள்.) முரசு - வெற்றி முரசம், வீற்றிருந்து - ஒழியாதே இருந்து, அதிர் -
முழங்குகின்ற, மூரி - பெரிய, தானையான் - படையை உடைய திவிட்டநம்பி, அரசு
வீற்றிருந்தனன் - அரியணை அமர்ந்து கோலோச்சுவானாயினன், பின்னை - அப்பால்,
ஆயிடை - அவ்வோலக்க மண்டபத்தே, கரைசெய் நீர்க்கருங் கடல்வேலி - அலைகளாலே
முழங்குதலைச் செய்கின்ற கடலை வேலியாகவுடைய உலகத்தை, காவலற்கு - காவல்
செய்கின்ற திவிட்ட வேந்தனுக்கு. புலவர் - நல்லிசைப் புலவர்கள் உரை செய் நூற்
சரிதைகள் - புகழ்தற்குரிய மெய்நூல்களிலே கூறப்படும் வரலாறு களை, ஓதினர் -
கூறுவாராயினர், (எ - று.)

     வெற்றிமுரசம் முழங்க அரசு வீற்றிருந்த நம்பிக்கு, புலவர்கள் நூற் சரிதைகள் ஓதினர்
என்க.
 

 (375)

 

புலவர்கள் வாசுதேவர் வரலாறுரைத்தல்

1507. ஆதிநா ளரசிய னீதி யாங்கெடுத்
தோதினார் புலவர்க ளோது மாயிடைத்