பக்கம் : 939
 

வாசுதேவர் குன்றெடுத்தமை கூறல்

1509.

1வன்றிறன் மலிபல தேவர் தம்மொடு
சென்றவர் செற்றலர்ச் செகுத்துப் பின்னரே
குன்றமொன் றெடுத்தலுங் 2கொண்டு கூறினார்
பொன்றலில் புராணநூற் புலவ ரென்பவே.
 

     (இ - ள்.) வன் திறல் மலி - வலிய ஆற்றல் மிக்க, பலதேவர் தம்மொடு - பல
தேவரோடு, சென்றவர் - சென்ற வாசுதேவர், செற்றலர்ச்செகுத்து - தம் பகைவராகிய
பிரதிவாசுதேவர் முதலியோரை வென்று, பின்னரே - அதன்பின்னர், குன்றம் ஒன்று
எடுத்தலும் - ஒருமலையைத் தூக்கிய வரலாற்றினையும், கொண்டு - புராணத்தினின்றும்
மேற்கொண்டு, கூறினார் - திவிட்டனுக்குக் கூறினார்கள், பொன்றலில் - அழிதலில்லாத,
புராண நூற் புலவர் - புராணம் கூறுதலில் வல்ல நல்லிசைப் புலவர்கள், என்பவே - என்று
அறிஞர் கூறுவர், (எ - று.)

     வலிய திறலுடைய பலதேவருடன் சென்று  பிரதிவாசுதேவரைக்  கொன்றருளிய
பின்னர்க் குன்றமெடுத்த  வரலாறுண்மையையும்  புலவர்  புராணத்தினின்றும்  எடுத்துக்
கூறினர், என்க.

(379)

 

திவிட்டன் செருக் கொழிதல்

1510. ஆங்கவர் மொழிதலு மருங்க லக்குழாம்
மீங்கிவை யென்னினு முன்ன மெய்தினார்
வாங்குநீர் மணலினும் பலர்கொ லோவென
வீங்கிய செலுக்கிலன் வீர னாயினான்.
 
     (இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, அவர் மொழிதலும் - அப்புராணம் வல்ல புலவர்
எடுத்துக் கூறியவுடன், அருங்கலக்குழாம் - எழுவகை அருங்கலத் தொகுதி, ஈங்கு இவை -
இவ்விடத்தே உளவாகிய இவையிற்றை, என்னின் முன்னம் - யான் எய்துதற்கு முன்னரும்,
எய்தினார் - அடைந்தோர்கள், வாங்குநீர் மணலினும் - வளைந்தகடல்
நீராற்றொகுக்கப்பட்ட மணலைக்காட்டினும், பலர் கொலோ - பலர் இவ்வுலகில்
பண்டிருந்தனரோ, என்று - என்று கூறி, வீரன் - திவிட்டன், வீங்கிய செருக்கிலன் -
பெருகிய இறுமாப்பில்லாதவனாய், ஆயினான் - அமையலாயினன், (எ - று.)
 

     (பாடம்) 1 மன்றலில் புகழ். 2கொணர்ந்து.