பக்கம் : 941 | | (இ - ள்.) எரிமணிக் கடகக் கை இரண்டும் ஊன்றி - ஒளிருகின்ற வாகுவலயம் செறித்த தன் இருகைகளையும் நிலத்திலே ஊன்றி, அப்பெரு மணி நிலம் பிலமாகக் கீழ் நுழைத்து அம்மலையடிப் பகுதியாகிய நிலம் குகைபோன்று பிளக்கும்படி கைகளைக் கீழே புகப் பாய்ச்சி, அருமணிநெடுவரை அதனை ஏந்தினான் - பெறற்கரும் மணிகளையுடைய நெடிய அம்மலையை அகழ்ந்தெடுத்துத் தனது கையகத்தே ஏந்தி நிற்பானாயினன், திருமணி நெடுமுடிச் செல்வன் என்பவே - நன்மை மிக்க மணிகளாலியன்ற நீண்ட முடியணிந்த செல்வமிக்க திவிட்ட நம்பி என்று அறிஞர்கள் இயம்புவர், (எ - று.) திருமணி நெடுமுடிச் செல்வனாகிய நம்பி தன் கடகக்கை யிரண்டும் ஊன்றி நிலம்பிலமாகக் கீழ்நுழைத்து அக் கோடிக்குன்றமென்னும் அருமணி நெடுவரையை ஏந்தி நின்றனன் என்க. | (382) | | இதுமுதல் செய்யுள்கள் குன்றேந்துதற் சிறப்புக் கூறும் ஒருதொடர் | 1513. | கைந்நிலம் புகநுழைந் தெடுப்பக் கல்லென மைந்நில நெடுவரை மறிய மற்றதன் செந்நில முழைமுகஞ் சிலம்புஞ் சீரினால் அந்நிலம் வாய்திறந் தழைப்ப தொத்ததே. | (இ - ள்.) கை நிலம்புக நுழைந்து எடுப்ப - திவிட்டனுடைய கைகள் நிலத்தினூடே புகுந்து அம்மலையினைப் பெயர்த்துத் தூக்கியபொழுது, மைநில நெடுவரை - முகில்கள் தங்குகின்ற நெடியவக் கோடிக்குன்றம், “கல்Ó என மறிய - கல் என்னும் ஓசையுடனே பெயர்ந்ததாக, மற்றதன் - அம்மலையின், செந்நில முழைமுகம் - செவ்விய அடிநிலத்தில் உண்டாகிய பிலத்தின்கண், சிலம்பும் சீரினால் - முழக்கம் உண்டாகும் தன்மையாலே, அந்நிலம் - அவ்வடி நிலம், வாய்திறந்து - ஆற்றாதே தன் வாயைத் திறந்து, அழைப்பது ஒத்தது - ஓலமிடுவதை ஒத்தது. (எ - று.) நிலவு - ஈறுகெட்டு நில என நின்றது. நம்பி கைநிலம் புகுந்து பெயர்த்தபொழுது குகைகளையுடைய அம்மலையில் உண்டாகிய “கல்Ó எனும் ஒலி, அந்நிலம் வாய்திறந்து அழைப்பதை ஒத்தது என்க. | (383) | | 1514. | பிலங்களு ளுறைவன பெரிய நாகத்தின் புலங்கெழு திரட்சிய புச்சந் தாழ்வன அலங்கலா னெடுத்திட வகழ்ந்தெ ழுந்தவவ் விலங்கலின் விழுகதிர் வேர்க ளொத்தவே. | |
| | |
|
|