பக்கம் : 942 | | (இ - ள்.) பிலங்களுள் உறைவன - அக்கோடிக்குன்றத்தின் குகைகளிலே வாழ்வனவாகிய, பெரிய நாகத்தின் - பெரிய பாம்புகளின், புலங்கெழு திரட்சிய புச்சம் - நிலத்திலே பொருந்திய பரியவால் (உடல்), தாழ்வன - தூங்குவன, அலங்கலான் - வெற்றி மாலையணிந்த திவிட்டன், அகழ்ந்து எடுத்திட - கீண்டு எடுத்தலாலே, எழுந்த அவ்விலங்கலின் - மேலெழாநின்ற அக் குன்றத்தினுடைய, விழுகதிர் வேர்கள் ஒத்தவே - வீழ்த்தப்பட்ட ஒளியுடைய வேர்களைப் போன்று தோன்றின, (எ - று.) நாகத்தின் புச்சம் தூங்குவன வேர்கள் ஒத்த என்க. புச்சம் - வால் - ஈண்டுப் பாம்பின் உடல், புலம் - நிலம். அலங்கலான் அகழ்ந்தெடுத்த அம் மலையின்கீழ் வாழும் பெரும் பாம்புகள் தொங்குவன அம்மலையின் பரிய வேர்களை ஒத்திருந்தன என்க. | (384) | | | 1515. | குழுவிய குவளையங் குண்டு மாச்சுனை ஒழுகிய வருவிநீ ருக்கு வீழ்வன கழுமிய நிலம்விட வெடுப்ப1க் கார்வரை அழுவதன் கண்ணுணீ ரழிவ தொத்ததே. | (இ - ள்.) குழுவிய - கூட்டமான, குவளை அங்குண்டு மாச்சுனை - நீலோற்பல மலர்களையுடைய அழகிய ஆழ்ந்த கரிய சுனைகள், ஒழுகிய அருவிநீர் - ஒழுகவிட்ட அருவியாகிய நீர், உக்கு வீழ்வன - சிந்தி விழுகின்ற தோற்றம், கழுமிய நிலம் விட - தான் பற்றிய நிலத்தினின்றும் அகலுமாறு, எடுப்ப - தன்னைப் பெயர்த்து எடுத்தலாலே, கார்வரை - அந்தக் கரிய மலை, அழுவதன் கண்ணுள் - அழுகின்ற தன் கண்ணகத்தே பெருகும், நீர் - கண்ணீர், அழிவது - சிந்துவதனை. ஒத்ததுஏ - ஒத்துத் தோன்றிற்று. (எ - று.) அம் மலையின்கண்ணுள்ள சுனைநீர், அதனைப் பெயர்க்கும் பொழுது வழிந்த தோற்றம், தன்னை அகழ்ந்த வருத்தத்தாலே அழுகின்ற அம் மலையின் கண்களினின்றும் நீர் ஒழுகுவதை ஒத்ததென்க. | (385) | | 1516. | தழுவிய தடவரைத் தாழ்வர் வாயெலாம் குழுமிய கொழுமுகில் வழுவி வீழ்வன செழுவரை செறியமுன் னுடுத்த செந்துகில் அழிவன வருகுவந் தசைந்த தொத்தவே. | |
| (பாடம்) 1 வவ்வரை. | | |
|
|