பக்கம் : 943 | | (இ - ள்.) தடவரைத் தாழ்வர் வாய்எலாம் - அக்கோடிக் குன்றமாகிய வலிய மலையின் தாழ்வரை யிடமெங்கும், குழுமிய தழுவிய கொழுமுகில் - திரண்டவாய்த் தழுவுதலையுடைய கொழுத்த முகில்கள், வழுவி வீழ்வன - அம்மலையைத் தூக்கிய பொழுது நழுவிக் கீழே விழுந்தவை, செழுவரை - செழிப்புடைய அக்கோடிக்குன்றம், முன் - முன்னர், செறிய உடுத்த - பொருந்தும்படி உடுத்திருந்த, செந்துகில் - செவ்விய ஆடை, அழிவன - நழுவுவனவாகி, அருகுவந்து - பக்கத்தே வீழ்ந்து, அசைந்தது ஒத்தவே - கிடந்ததைப் போன்றது, (எ - று.) அக் கோடிக் குன்றத்தின் மிசை படிந்திருந்த முகில்கள் நழுவி வீழ்ந்ததோற்றம், அக்குன்றம் உடுத்த செவ்விய துகில் நழுவி வீழ்ந்ததைப் போன்றது என்க. | (386) | | | 1517. | ஒன்றுதன் செறிகுறங் கூன்றிக் கைத்தலம் ஒன்றினா னொளிவரை யுயர வேந்துபு 1நின்றன னெடியவ னீல மாமணிக் குன்றமோர் குன்றங்கொண் டெழுந்த தொப்பவே. | (இ - ள்.) ஒன்றுதன் செறி குறங்கு ஊன்றி - ஒரு கையைத் தனது திரண்ட தொடையிலே ஊன்றிக்கொண்டு, கைத்தலம் ஒன்றினால் - எஞ்சிய ஒரு கையாலே, ஒளிவரை உயர ஏந்துபு - ஒளிமிக்க அம்மலையை உயர்த்துத் தூக்கி, நெடியவன் - நெடுமாலாகிய திவிட்டன், நீலமாமணிக்குன்றம் - ஒரு சிறந்த மரகத மலையானது, ஓர் குன்றங்கொண்டு எழுந்தது ஒப்பவே - மற்றொரு மலையை ஏந்திக்கொண்டு எழுந்ததைப் போன்று, நின்றனன் - நிற்கலானான், (எ - று.) நம்பி, தன் ஒரு கையைத் தொடையிலே ஊன்றி, மற்றொரு கையால் அக்குன்றத்தை உயர்த்தேந்தி நின்ற தோற்றம், ஒரு மரகத மலை மற்றொரு மலையை ஏந்தி நின்றாற்போற் றோன்றியதென்க. | (387) | | வேறு | 1518. | பொருமாலை வேலரசர் போற்றிசைப்பப் பூவின் அருமா மழைபெய் தமருலக மார்ப்பக் கருமா னெடுவரையோர் கைத்தலத்தி னேந்தித் திருமா மணிவண்ணன் செம்மாந்து நின்றான். | |
| (பாடம்) 1 நின்றனன். கொடியவன். | | |
|
|