பக்கம் : 944 | | (இ - ள்.) பொரு மாலை வேல் அரசர் - போர் செய்யும் இயல்புடைய வேல்வேந்தர்கள், போற்றிசைப்ப - புகழ்ந்து வாழ்த்துக்கூற, பூவின் அருமா மழை - கற்பக மலராலாய பெறற்கரிய பெரிய மழையினை, அமரர் பெய்து - தேவர்கள் பொழிந்து, ஆர்ப்ப - ஆரவாரிப்ப, கரு மா நெடு வரை ஓர் கைத்தலத்தின் ஏந்தி - கரிய பெரிய நீளிதாய கோடிக் குன்றத்தைத் தன் ஒரு கையாலே ஏந்தியவனாய், திருமா மணிவண்ணன் - திருமகள் முயங்கும் சிறந்த நீலமணி நிறமுடையனாகிய திவிட்டன், செம்மாந்து நின்றான் - வீறுகொண்டு விளங்கினான் (எ - று.) மணிவண்ணனாகிய நம்பி, அரசர் போற்ற, அமரர் மலர் மாரி தூற்ற, கரிய அந் நெடுங்குன்றைத் தன்னொரு கைத்தலத்தே ஏந்தி, வீறுடன் நின்றான் என்க. | (388) | | | 1519. | 1அடிமேற் பூங்கழல்க ளம்பொன் னிலங்கு 2முடிமேற் சூளா மணிமுளைத்த சோதி கடிமேல் விரிதாரோன் கைத்தலத்த தன்று படிமேன் மணியருவி பாரித்த குன்றம். | (இ - ள்.) பூங்கழல்கள் - அழகிய வீரக்கழல் என்னும் அணிகள், அடிமேல் - திவிட்டநம்பியின் திருவடிமேல் திகழ்ந்தன, சூளாமணி - முடிமணிவடம், அம்பொன் இலங்கு முடிமேல் - அழகிய பொன்னாலாய விளங்கும் முடியணியின் மேல் மிளிர்ந்தது, முளைத்த சோதி கடிமேல் விரிதாரோன் - தோன்றா நின்ற ஒளிமிக்க மணியணிகளும், மணம்பரப்பும் மலர்ந்த மலர் மாலையும் உடைய திவிட்டனுடைய, கைத்தலத்தது - கையின் கண் இருந்து திகழா நிற்பது, அன்று - அற்றைநாள், படிமேன் மணி அருவி பாரித்த குன்றம் - பூமியின் மேலே மணிகளையும் அருவிநிரையும் பரப்பிய அக்கோடிக் குன்றமாம், (எ - று.) வீரக்கழல்கள் திருவடியின்கண்ணும் சூளாமணி முடியின் மிசையும் கிடந்து மிளிரும் நம்பியின் கைத்தலத்தே அற்றைநாள் அக்கோடிக்குன்றம் இருந்து திகழ்ந்ததென்க. | (389) | | 1520. | வரையெடுத்த மாணிக்க நீள்கடகக் கையால் உரையெடுப்பான் போனிமிர்ந்து நோக்காது நிற்ப விரையெடுத்த பூந்தார் விறல்வேந்த ரஞ்சிப் புரையெடுத்த மாமகரப் பொன்முடிகள் சாய்த்தார். | |
| (பாடம்) 1 அடிமேனற். 2 முடிமேனற். | | |
|
|