பக்கம் : 945
 

     (இ - ள்.) வரை எடுத்த மாணிக்க நீள் கடகக் கையால் - மலையைப்
பெயர்த்தேந்திய வன்மையுடைய மாணிக்கத்தாலே இயற்றிய நீளிய வாகுவலய மணிந்த தன்
கையாலே, உரை எடுப்பான்போல் நிமிர்ந்து நோக்காது நிற்ப - உரையை
வலிந்தெழுப்புவான் போன்று நேரே நிமிர்ந்து பிறரைப் பாராதவனாய்த் திவிட்டன் நின்றிட,
விரை எடுத்த பூந்தார் விறல் வேந்தர் - மணம் மிகுந்த மலர் மாலையை அணிந்த
வெற்றிமிக்க மன்னர்கள், அஞ்சி - குறிப்புணரமாட்டாராய் அச்சம் எய்தி, புரை யெடுத்த
மா மகரப் பொன்முடிகள் சாய்த்தார் - உயர்வுடைய பெரிய பூந்தாதுகள் பொருந்திய
பொன்னாலியன்ற முடிக்கலன் அணிந்த தம் தலைகள் கவிழ நிற்பாராயினர், (எ - று.)

     நம்பி, சொல்லெடுத்து வாதமிடுவானைப் போன்று, அம்மலையைத் தன் கையாலே
உயர்த்து நிமிர்ந்து பிறரைப் பாராதவனாய் நின்ற போது, விறல்வேந்தர் அவன்
அருட்பார்வை பெறாது அஞ்சித் தம் பொன்முடிகள் சாய்த்து வணங்கினர் என்க.
நிமிர்ந்து நிற்றற்கு உரையெடுப்பான் உவமை என்க.

(390)

 

திவிட்டன் குன்றத்தை வைத்துவிட்டு
யானை ஏறுதல்.

வேறு

1521. கோடிக் குன்றங் கோடியல் போலுங் குவவுத்தோள்
கோடிக் குன்றங் கொண்டது மீட்டே கொளநாட்டிக்
கோடிக் குன்றம் போந்தென நின்ற கொலைவேழம்
கோடிக் குன்ற மன்னவ னேறிக் குளிர்வித்தான்.
 
     (இ - ள்.) கோடிக்குன்றம் கோடு இயல்போலும் - உச்சியை உடைய மலையின்
கொடுமுடியின் தன்மையை ஒத்த, குவவுதோள் - திரண்ட தோளாலே, கோடிக் குன்றம்
கொண்டு - கோடிக்குன்றத்தைப் பெயர்த்து, அதுமீட்டே கொளநாட்டி - அக்குன்றம்
மீண்டும் தன்னிடத்தைப் பெறும்படி நட்டு, கோடிக் குன்றம் போந்து என நின்ற - அந்தக்
கோடிக்குன்றமே புடைபெயர்ந்து வந்தது போன்று வந்து நின்ற, கொலை வேழம் -
கொலைத் தொழில்வல்ல அரசுவாவின் பிடரின்கண், கோடிக்குன்ற மன்னவன் -
எண்ணிறந்த மலைகளுக்கு அரசனான திவிட்டநம்பி, ஏறி - ஏறி அமர்ந்து, குளிர்வித்தான்
- மக்கள் உளங்களை மகிழும்படி செய்தான், (எ - று.)

     ஏந்திய கோடிக்குன்றத்தை மீண்டும் அஃதிருந்த விடத்தே வைத்துவிட்டு நம்பி
யானையில் ஏறி மக்களின் உளங்குளிரச் செய்தான் என்க.

 (391)