பக்கம் : 947
 

     அந்திமாலையிற் றோன்றும் திங்களை ஒத்த முத்துமாலைகளால் அழகு செய்யப்பட்ட
வெண்குடை நீழலிலே மகிழ்ந்து வாழும் அந்நாட்டு மக்களாகிய கடல்போன்ற கூட்டம்
நம்பியை எதிர்கொண்டு சூழ்ந்ததென்க.

(393)

 
1524 மையார் சென்னி மாளிகை முன்றின் மலர்மேயும்
மையார் பொய்கைத் தண்புன னாடன் வரலோடும்
மையார் கண்ணி னாம்பய மெல்லா மடவாரிம்
மையா மின்றே யெய்தின மென்றே மகிழ்வுற்றார்.
 
     (இ - ள்.) மை ஆர் சென்னி - முகில்கள் பொருந்திய சிகரங்களையுடைய, மாளிகை
முன்றில் - மாளிகையின் முற்றத்தின்கண், மலர் மேயும் - மலர்கள் பொருந்திய, மை ஆர்
- கரு நிறமமைந்த, பொய்கை - வாவிகளையுடைய, தண் புனல் நாடன் - குளிர்ந்த
நீர்நாடனாகிய திவிட்டநம்பி, வரலோடும் - வந்தெய்திய உடனே, மடவார் - மகளிர்கள்,
இம்மை - இப்பிறப்பிலேயே இன்றே - இற்றைநாளில், மையார் கண்ணின் ஆம் -
மையூட்டப்பெற்ற நம் கண்களால் யாம் பெறலாகும், பயம் எல்லாம் - இன்பம் அனைத்தும்,
யாம் - நாம், எய்தினம் - பெற்றடைந்தோம், என்றே - என்று இயம்பி, மகிழ்வுற்றார் -
மகிழ்ந்தனர், (எ - று.)

     மாளிகையின் முற்றங்களிலே மலர் நிறைந்த பொய்கைகளையுடைய, புனனாடனாகிய
நம்பி வந்தவுடன், அவன் திருமேனி எழிலிலே வீழ்ந்த கண்ணையுடைய மடவார், யாம்
இன்று இம்மையிலேயே கண் பெற்றதற்குரிய பயன் முழுதும் எய்தினோம் என்று கூறி
மகிழலாயினர் என்க.

(394)

 
1525. ஆம்பன் னாணுஞ் செந்துவர் வாயா ரமிர்தூறி
யாம்பன் னாணுந் தேமொழி நல்லா ரலர்தூவி
யாம்பன் னாணும் விட்டன ரார்வக் களிகூர
வாம்பன் னாணும் பல்புக ழானந் நகர்புக்கான்.
 
     (இ - ள்) ஆம்பல் நாணும் - அரக்காம்பல் நிறமொவ்வோமென்று நாணுதற்குக்
காரணமான, செந்துவர் வாயார் - செவ்விய பவளம்போன்ற வாயினையுடையவரும், அமிர்து
ஊறி - அமிழ்தின் சுவையைத் தோற்றுவித்து, ஆம்பல் நா ணும் - ஆம்பற் குழலும்
இனிமையின் ஒவ்வேன் என்று நாணுதற்கு ஏதுவாய, தேம் மொழிய - இனிமையுடைய
மொழியையுடைய, நல்லார் - இளமகளிர்கள், அலர்தூவி - மலர்களைச்சிதறி, ஆம்பல்
நாணும் விட்டனர் - தமக்குரித்தாகிய பலவாகிய நாணங்களையும்