பக்கம் : 948 | | விட்டவர்களாய், ஆர்வக் களிகூர - காட்சி அவாவுற்றுக் கண்டு மகிழா நிற்ப; ஆம்பல் நாணும் பல் புகழான் - ஆம்பல் என்னும் பேரெண்ணும் நாணும்படி விரிந்த பலவாகிய புகழையுடைய திவிட்டநம்பி, அந்நகர் புக்கான் - அந்தப் போதன நகரத்தே புகுந்தான், (எ - று.) ஆம்பற்பூ நாணுதற்குரிய அழகிய செவ்வாயினையும், ஆம்பற்குழல் நாணுதற்குரிய இனிய மொழியினையும் உடைய மகளிர்கள், தங்கட்கு உரியவாம் நாணங்களை விட்டவராய்த் தன்னைக் கண்டு மகிழாநிற்ப நம்பி நகர்புக்கான் என்க. ஆம்பல் - ஒரு பேரெண். அது நாணுதற்குக் காரணம் நம்பியின் புகழ் தன் என்லையும் கடந்தமை என்க. | (395) | | | 1526. | தாமரை நாறுந் தண்பணை யெல்லா மகிழ்நாறச் சாமரை வீசத் தாழ்குழை செம்பொன் சுடர்வீசத் தேமரை யாளுஞ் சேயிழை யாளுந் திருமாலும் பூமரை வேலிப் போதன மென்னுந் நகர்புக்கார். | (இ - ள்.) தாமரை நாறும் - தாமரை மலரின் மணங்கமழும், தண்பணை எல்லாம் - குளிர்ந்த கழனிகள் எல்லாம், மகிழ் நாற - மகளிர் சூடிய மகிழ மலர் மணங்கமழா நிற்ப, சாமரை வீச - இளமகளிர்கள் வெண்கவரி இரட்டா நிற்ப, தாழ்குழை செம்பொன் சுடர்வீச - தொங்குகின்ற தோடுகளும் குண்டலங்களும் செம்பொன் ஒளிபரப்ப, தேம் மரையாளும் - தேன் பொருந்திய செந்தாமரை மலரின்கண் வீற்றிருக்கும், சேயிழையாளும்- திருமகளாகிய, சுயம்பிரபையும், திருமாலும் - திவிட்டநம்பியாகிய திருமாலும், பூமரைவேலிப் போதனமென்னும் - தாமரைப் பூங்காட்டை வேலியாகவுடைய போதனம் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற, நகர் புக்கார் - கோநகரத்திலே புகுந்தனர், (எ - று.) தாமரை மணம் கமழும் பணையெல்லாம் மகிழ்நாற என்றமையால் மகளிரின் மிகுதி கூறிற்று, குழை நம்பிக்கும் நங்கைக்கும் பொதுவினுரைத்தலிற் றோடும் குண்டலமும் என்க. நம்பியும் நங்கையும் நகர் புக்கனர் என்க. | (396) | | போதன நகரம் அணி செய்தல் | வேறு | 1527 | முன்வாயின் முகமெல்லா முத்தடுத்துத் தாமரை வெண் முளைகள் பாய்த்தி மின்வாய மணிக்கலசம் பொற்செந்நெற் கதிர்சூட்டி விளங்க வைத்துப் | |
| | |
|
|