பக்கம் : 951 | | தோள்களையுடைய, மெல்லியலார் - மெல்லியன் மகளிர்கள், ஓடி - விரைந்து, மாபுரத்து மாளிகை தம் - பெரிய நகர்க்கண் அமைந்த தமது மாளிகையின், மணிக்கதவம் - மணிகள் அழுத்திய கதவுகளின், தாழ்திறந்து - தாழ்களை அகற்றித் திறந்து, மேலும், மனத்தின்றாழும் - தம் மனத்தின்கண் உள்ள நாணமாகிய தாழ்களையும், மெல்ல மெல்ல - பைப்பைய, திறந்தார் அன்றே - திறக்கலாயினர். அன்று, ஏ: அசைகள், (எ - று.) குளிர்நகரை என்புழிக் குளிர் - மகிழ்ச்சியைக் குறித்து நின்றது. குடையோன் செல்லும்பொழுது, மெல்லியலார் கலந்தொலிப்பச் சென்று ஓடி, மாளிகையின் மணிக்கதவம் தாழ்திறந்து, மனக்கதவின் நாண் என்னும் தாழும் மெல்ல மெல்லத் திறந்தார், என்க. | (399) | | 1530. | போர்மேக மன்னதிறற் பொருகளிற்று மேலரசர் போற்றுக் கூவச் சீர்மேக மெனச்செறிக ணிடிமுரசங் கடிததிர்ந்து திசைமே லார்ப்ப நீர்மேக முத்தினெடுந் தண்குடைக்கீழ் நிழற்றுளும்பு நேமி தாங்குங் கார்மேக வண்ண னிவன் வருவானைக் காண்மினே கண்க ளார. | (இ - ள்.) மேகம் அன்ன போர் திறல் பொரு களிற்று மேல் - முகில் போன்ற போர்த்தொழில் ஆற்றல் மிக்க போர் யானைகளின் எருத்தத்தே வீற்றிருந்து, அரசர் போற்றுக்கூவ - மன்னர்கள் வாழ்த்துக்கூற, சீர்மேகம் என - சிறந்த முகில் முழங்கினாற் போலே, செறிகண் இடிமுரசம் - செறிந்த கண்ணிடத்தே அறைதலையுடைய முரசம், கடிது அதிர்ந்து - பெரிதும் முழங்கி, திசைமேல் ஆர்ப்ப - திசைகளிடத்தே ஆரவாரிப்ப, நீர்மேக முத்தின் நெடுந்தண் குடைக்கீழ் - நீர் பொருந்திய மேகத்திலே விளைந்த முத்தினாலே புனையப்பட்ட நெடிய குளிர்ந்த திங்கட்குடையின் கீழே, நிழல் துளும்பும் நேமி தாங்கும் - ஒளி தவழ்கின்ற சக்கரப் படையை ஏந்துகின்ற, கார் மேக வண்ணன் - கரிய மேகவண்ணனாகிய திவிட்டன் என்னும், இவன் - இப்பெரியோன், வருவானை - வருகின்றவனை, கண்கள் ஆர - கட்பொறிகள் நனிபொருந்தி மகிழ, காண்மின் ஏ - காணுங்கோள், ஏ: அசை, (எ - று.) முகில் போன்ற களிற்றின் எருத்தத்தே யிருந்து, அரசர் போற்றுக்கூவ, முரசமார்ப்பத் தண்குடைக்கீழ், நேமி தாங்கும் கார்மேக வண்ணன் வருவானை, கண்களாரக் காணுங்கோள் என்றார் என்க. | (400) | | |
| | |
|
|