பக்கம் : 955 | | மூங்கிலைச் சினக்கின்ற பணைத் தோளிலே, வெண்சந்தனம் பூசி, முத்தணிந்து, உத்தரீயமிட்ட மகளிர் உழைநின் றேத்த, விமானத்தின் அகத்தேயுள்ள, வரைமன்னன் மகளாகிய சுயம்பிரபையையும், இனிக் காண்போம், வாருங்கோள்! என்றார், என்க. | (404) | | 1535. | அருமணிநீள் விமானத்தி னாகாயப் பளிங்கியன்ற விளிம்பி னாலும் திருமணியி னொளிமேனி நிழலெறிப்பத் திகழ்ந்திலங்குந் தெய்வப் பாவை கருமணியின் கதிர்குழற்றிக் கடைசுருட்டிக் கைசெய்து வளர்த்த போலும் புரிமணியொண் குழறிகழப் பொன்னணைமே லினிதிருந்த பொலிவு காண்மின். | (இ - ள்.) அருமணி நீள் ஆகாய விமானத்தின் - அரிய மணிகள் பதித்த நீளிதாய வானவூர்தியின், பளிங்கு இயன்ற பளிங்கினாலே இயற்றப்பட்ட, விளிம்பினாலும் - விளிம்புகள் ஒளி வீசுதலாலும், திருமணியின் - அழகிய மணிநிறங்கொண்ட, ஒளி மேனி - ஒளியையுடைய திருமேனி, நிழல் எறிப்பு - ஒளி வீசுதலாலும், திகழ்ந்து இலங்கும் - விளங்கி ஒளிர்கின்ற, தெய்வப் பாவை - தெய்வமகள் போன்ற சுயம்பிரபை, கருமணியின் - நீலமணியினது, கதிர் குழற்றி - சுடர்களைக் குழலச் செய்து, கடைசுருட்டி - நுனியைக் சுருளும்படி செய்து, கை செய்து - ஒப்பனை செய்து, வளர்த்த போலும் - வளர்த்து வைத்தாலொத்து, புரி மணி ஒண் குழல் திகழ - ஒளிர்கின்ற மணி மாலை சூட்டப்பட்ட ஒள்ளிய கூந்தல் மிளிர, பொன்அணைமேல் - பொன்னாலாய ஆதனத்தின் மிசை, இனிதிருந்த - இனிதாக வீற்றிருந்த, பொலிவு காண்மின் - அழகினைக் காணுங்கோள், (எ - று.) விமானத்தின் உள்ளே, நிழல் எறிப்ப இலங்கும், தெய்வப்பாவை போன்ற கோப்பெருந்தேவி, மணியின் கதிர் குழற்றிக் கடைசுருட்டிக் கை செய்து வளர்த்தாற் போன்ற, தன் குழல் திகழ, பொன்னணை மேலினிதிருந்த அழகினைக் காணுங்கோள்; என்றார், என்க. | (405) | | அவள் விழியழகு | 1536. | மாநீல மிடைபதித்து வெண்பளிங்கிற் செவ்வரத்த விரேகை வாங்கிப் பானீர வேல்வடிவு படத்திருத்தித் தாமரையுட் பாரித் தன்ன | |
| | |
|
|