பக்கம் : 956 | | | | தூநீல வாணெடுங்கண் குழைமுகத்தி னுள்ளிலங்கத் தோன்று கின்ற வாய்நீல மணியைம்பா லிவ்வணங்கு வரையணங்கோ வன்றோ காண்மின். | (இ - ள்.) வெண்பளிங்கில் - வெளிய பளிங்கினில், மாநீலம் இடைபதித்து - சிறந்த நீலமணியை இடையிலே அழுத்தி, செவ்வரத்த இரேகை வாங்கி - செவ்வரக்குக் குழம்பாலே சிறிய வரிகள் வரைந்து, பால் நீர வேல்வடிவு படத்திருத்தி - பாலினது நீர்மையாகிய வெண்மை நிறமுடைய வேலினது உருவம் உண்டாகும்படி சீர்திருத்தி, தாமரையுள் - செந்தாமரை மலர் அகத்தே, பாரித்தன்ன - வைத்தாற் போன்ற, தூநீலவாள் நெடுங்கண் - தூய நீலநிறமுடைய ஒளியுடைய நீண்ட கண்கள், குழை முகத்தின் உள் - தோடுகளையுடைய முகத்தின் அகத்தே, இலங்க - திகழா நிற்ப, தோன்றுகின்ற - காணப்படுகின்ற, ஆய் நீலமணி ஐம்பால் - ஆராய்கின்ற நீலமணி போன்ற அளகத்தை உடைய, இ அணங்கு - இத்தெய்வ மகள், வரை யணங்கோ - மலையரமகளோ, அன்றோ - அல்லளோ, காண்மின் - காணுங்கோள், (எ - று.) வெளிய பளிங்கில், மரகதமணியை இடையே பதித்துச் செவ்வரக்குக் குழம்பாலே வரியுண்டாக எழுதி, வெளிய வேல்வடிவுண்டாகத் திருத்திச் செந்தாமரை மலரகத்தே வைத்தாற்போன்ற, நீல வாள் நெடுங்கண் முகத்திற்றிகழ, தோன்றாநின்ற கூந்தலையுடைய இவள் வரையணங்கோ! அல்லளோ! காண்மின்! என்றார், என்க. | (406) | | 1537. | எழுதாது மையொளிரு மிருமருங்கு மெறித்திடையே செங்கே ழோடித் தொழுதாற்கு வரங்கொடுக்குந் தடங்கண்ணி துணைமுலையின் வளாகஞ் சூழ விழுதாய குங்குமத்தா லிலதையையுங் கொழுந்தினையு மிழைத்தார் பின்னு முழுதார முத்தணிந்தார் நுண்மருங்கு லுளதாக முயன்றா ரல்லர். | |
| | |
|
|