பக்கம் : 960 | | (இ - ள்.) செம்பொன் செய் பொடியினாலும் - செம்பொற் சுண்ணம் தூவலாலும், சிவிறியின் தாரையாலும் - நீர்த்துருத்தியாலே வீசாநின்ற தாரையாலும், அம்பொன் செய் மலரினாலும் - அழகிய பொற்பூக்களைத் தூவுதலாலும், அகிற்புகை ஆவியாலும் - அகிலிடுகின்ற நறுமணப் புகை புகைத்தலாலும், பைம்பொன் செய் பதாகையாலும் - பசிய பொன்னாற் செய்த கொடிகளாலும், பரந்திருள்பட்ட வீதி - பரவி இருண்டு போன வீதியிடத்தே, கம்பம் செய் யானை யானை- தறியிலே கட்டுதலையுடைய அரசுவாவில் வருகின்ற திவிட்டநம்பியை, கண்விளக் குறுத்த - மாதர்களின் கண்ணொளி பாய்ந்து விளக்கம் செய்தன, அன்று, ஏ: அசைகள், (எ - று.) கம்பஞ் செய் யானை - பகைவர்க்கு நடுக்கம் உண்டாக்கும் யானை எனினுமாம். பொடியினாலும், தாரையாலும், மலரினாலும் புகையாலும் இருண்ட வீதியிடத்தே வருகின்ற நம்பியின்மேல் மாதர்களின் கண்ணொளி பாய்ந்து விளக்கஞ் செய்ததென்க. | (411) | | 1542. | மன்னிய புகழி னான்மேல் வாங்குவிற் புருவ மாக மின்னவிர் பகழி கண்ணாப் புரிசைவெண் மாட மாகத் துன்னிய சால வாயிற் றுளைகளே துளைக ளாகக் கன்னிய ரெய்து தத்தங் கடிநகர் காவல் கொண்டார். | (இ - ள்.) மன்னிய புகழினான் மேல் - நிலைபெற்ற புகழையுடைய திவிட்டநம்பியின் திருமேனிமிசை, புருவம் வாங்கு வில் ஆக - மகளிர்கள் தம் புருவங்களையே வளைக்கும் வில்லாகக்கொண்டு, கண் மின் அவிர்பகழியா - தம் கண்களையே ஒளியுடைய அம்புகளாகக்கொண்டு, வெண்மாடம் புரிசையாக - தத்தம் வெள்ளிய மாடங்களையே மதில் அரணாய்க்கொண்டு, துன்னிய சாலவாயிற் றுளைகளே துளைகளாக - அம்மாடத்திற் பொருந்திய காளரத்துளைகளே அம்மதிலில் அமைந்த படை விடும் துளைகளாகக்கொண்டு, கன்னியர் எய்து - மகளிர்கள் எய்து, தத்தம் கடிநகர் - தங்கள் தங்கள் கடிதடம் என்னும் நகரத்தை மட்டுமே, காவல்கொண்டார் - காவல் செய்வாராயினர், (எ - று.) கடிநகர் - கடிதடம்; அல்குல். இப்போரில், கன்னியர் தம் கடிதட மட்டுமே காவல் கொண்டனர் எனவே, அவர் மனம் கண் முதலியவற்றைத் திவிட்டக் கள்வன் கவர்ந்து போயினன் என்க. | (412) | | 1543. | ஆடுவா ரணங்கு கொள்வா ரார்வஞ்செய் கருவி வீக்கிப் 1பாடுவார் கண்டு கூறிப் பரவுவார் பணிந்து முன்னாற் | |
| (பாடம்) 1 பாடுவார் கண்டு. | | |
|
|