பக்கம் : 963 | | இந்திரனையும் காட்டில் இரட்டியுள்ள நம்பி, விசயன் கோயில் புக்க பின்னர், மகளிர் மங்கலப் பொருளோடே எதிர்கொண்டழைப்பச் சென்று, சுயம்பிரபையிருந்த விமானத்தை எய்தினான், என்க. | (416) | | சுயம்பிரபைக்குக் “கோப்பெருந்தேவிÓ என்னும் பட்டம் வழங்க முரசறைதல் | 1547. | மாலையாங் கடைந்த போழ்தின் மங்கலத் தேவிப் பட்டங் காலையா மணிவ தென்று கண்ணதிர் முரசிற் சாற்றிப் பாலையாழ் மழலை யாளைக் காப்பணி பயின்ற செல்வம் வேலைசூ ழுலக மெல்லாம் விம்முற விளைந்த தன்றே. | (இ - ள்.) மாலை ஆங்கு அடைந்த போழ்தின் - அந்தி மாலைப்போதின்கண் அச்சுயம்பிரபையின் விமானத்தைத் திவிட்ட நம்பி எய்திய உடனே, மங்கலத் தேவிப் பட்டம் - மங்கலச் செயல்களோடே சூட்டு மரபிற்றாகிய கோப்பெருந்தேவி என்னும் பட்டத்தை, அணிவது - சுயம்பிரபைக்குச் சூட்டப் பெறுவது, காலைஆம் என்று - நாளை விடியலிலே நிகழும் என்று கூறி, கண் அதிர் முரசிற் சாற்றி - கண்ணிடத்தே அதிர்ந்து முழங்கும் முரசத்தை அறைந்து மாநகர்க்கு அறிவித்து, பாலை யாழ் மழலையாளை - பாலைப்பண்ணை இசைக்கும் யாழ் போன்ற இனிய மழலைபேசும் சுயம்பிரபைக்கு, காப்பு அணி பயின்ற செல்வம் - காப்பு அணி கட்டிய விழாவின் செல்வமாகிய துழனி, வேலைசூழ் உலகம் எல்லாம் - கடல் சூழ்ந்த உலகமெங்கும், விம்முற - விம்மிதமுற்று மகிழும்படி, விளைந்தது - நிகழ்ந்தது, அன்று, ஏ: அசை, (எ - று.) அந்திமாலைப் போதில் சுயம்பிரபையிருந்த விமானத்தை நம்பி எய்தியபின், மறுநாட்காலைநேரத்தே சுயம்பிரபைக்குத் தேவிப் பட்டம் சூட்டப்படும் என்னும் செய்தியை நகர்க்கு முரசறைந்து அறிவிப்ப, தேவிக்குக் காப்புநாண் அணிவிழாத்துழனி அப்போதே உலகம் விம்முற எழுந்தது என்க. | (418) | | 1548. | அங்கொளி விளக்கி னாலு மணிகலச் சுடரி னாலுந் திங்களை யனைய செல்வி திருநுத லொளியி னாலு மங்கல 1மரபிற் றல்லா மயங்கிருண் மறைந்து போகக் கங்குலு மெல்ல மெல்லக் கையகன் றிட்ட தன்றே. | |
| (பாடம்) 1 மரபிற் றெல்லா. | | |
|
|