பக்கம் : 965 | | சுயம்பிரபைக்குக் கோப் பெருந்தேவி என்னும் பட்டம் சூடுதல் | 1550. | விஞ்சைய ருலகு மண்ணும் விண்ணுமொன் றாய தேபோற் செஞ்சுடர் மணியும் பொன்னு மாலையும் விரையுஞ் சேர்த்தி யஞ்சுடர் வயிரப் பைம்பூ ணலைகடல் வண்ணன் றன்னாற் பஞ்சுடை யல்குல் பாக வரசொடு பட்டங் கொண்டாள். | (இ - ள்.) விஞ்சையர் உலகும் மண்ணும் விண்ணும் ஒன்றாயதேபோல் - விச்சாதரர் உலகமும் மண்ணுலகமும் தேவருலகமும் ஒன்றுபட்டாற்போன்று ஒருங்கே கூடாநிற்ப, செஞ்சுடர் மணியும் பொன்னும் மாலையும் விரையும் சேர்த்தி - செவ்விய ஒளியுடைய மணிகளையும், பொன் அணிகளையும் மாலையையும், நறுமணப் பொருள்களையும் கொண்டு ஒப்பனை செய்யப் பெற்று, அம்சுடர் வைரப் பைம்பூண் - அழகிய வொளியுடைய வயிர மணிகள் அழுத்திய பசிய அணிகலன்களையுடைய, அலைகடல் வண்ணன் தன்னால் - திவிட்டநம்பியாலே, பஞ்சுடை அல்குல் - பஞ்சாலே நுண்ணிதின் இயன்ற ஆடையுடைய அல்குற்றடத்தினளாகிய சுயம்பிரபை, பாக அரசொடு பட்டங்கொண்டாள் - அரசியலிலும் பாதி உரிமை உடையதாகிய கோப்பெருந்தேவி என்னும் பட்டத்தை எய்தினள், (எ - று.) விஞ்சையரும், மண்ணுலகத்தாரும், தேவரும் ஒருங்கே கூடுதலின் “விஞ்சையர் உலகு மண்ணும் விண்ணும் ஒன்றாயதேபோல்Ó என்றார்; ஒன்றாயதேபோல் ஒருங்கே கூட என வருவித்துரைக்க. மணியும், பொன்னும், மாலையும், விரையும், சேர்த்தி அலைகடல் வண்ணன் அளிப்பத் தேவி கொண்டாள் என்க. | (420) | | பாக அரசு - அரசுரிமையினும் பாதி, என்க: | 1551. | சடிமன்னனை இரதநூபுரத் திற்குச் செல்ல வழிவிடல் தேவிதன் றாதைக் கேற்ற பெருஞ்சிறப்பி பியற்றிச் செல்வன் வேய்விரி வெள்ளிக் குன்றின் விஞ்சைய ருலக மெல்லா மோவில புகழி னானுக் குடன்கொடுத் துரிமை யோடும் பூவிரி யுருவத் தாரான் பின்சென்று விடுத்துப் போந்தான். |
| | | |
|
|