பக்கம் : 976 | | (இ - ள்.) காது பெய் குழையும் - செவியிலே இடப்பட்ட குண்டலங்களும், செம்பொன் சுருளையும் - செம்பொன்னாற் செய்யப்பட்ட குதம்பையும், கலந்துமின்ன - சேர்ந்து ஒளிர, போது அலர்குஞ்சி - விரிந்த மலர் செருகிய தலைமயிரினை, ஆங்குஓர் பூந்துணர் வடத்தின் வீக்கி - அவ்விடத்தே கிடைத்த ஒரு பூங்கொத்தாலியன்ற மாலையாலே வரிந்து, ஓதிய மருங்குல் தன்மேல் ஒருகை வைத்து - கூறப்பட்ட இடையிலே ஒரு கையை இயைத்து, ஒருகை தன்னால் - மற்றொரு கையாலே, மீதியல் வடகம் பற்றி - உடலின் மேலதாகிய பூம்போர்வையைப் பிடித்துக்கொண்டு, வெண்ணகை நக்கு - வெளிற்றுச் சிரிப்புச் சிரித்து, நின்றான் - நிற்கலானான், (எ - று.) வெண்ணகை - பொருள்படாத வறுநகை, வடகம் - மேலாடை. (‘வெள்ளைமகன் போல் விலாவிற நக்கு‘) என்றார் பிறரும். | (435) | | விதூடகன் நகைக் கூத்தாடல் | 1566. | மூடிய புகழி னாற்கு முகிழ்நகை பயந்து காட்டுங் கோடிய நிலையின் முன்னாற் குஞ்சித்த வடிவ னாகிப் பாடிய சாதிப் பாடல் பாணியோ டிலயங் கொள்ள வாடிய லெடுத்துக் கொண்டாங் கந்தண னாடு கின்றான். | (இ - ள்.) மூடிய புகழினாற்கு - உலகமுழுவதும் பரவி ஏனையோர் புகழ்களை எல்லாம் மறைத்த பெரும்புகழையுடைய திவிட்டநம்பிக்கு, முகிழ்நகை பயந்து காட்டும் - தோன்றுகின்ற நகைக்கு ஏதுவாகிய சுவையைப் பயந்து இன்பங் காட்டுகின்றதொரு, கோடிய நிலையின் - உடலை வளைத்துக்கொண்ட நிலையினோடே, முன்னால் - முன்புறத்தே, குஞ்சித்த வடிவன் ஆகி - சிறிது குனிந்துள்ள வடிவத்தை உடையனாய், பாடிய பாடல் சாதிப் பாணியோடு இலயங் கொள்ள - தான் பாடாநின்ற இசைப்பாடல் சாதி என்னும் தாள அளவையோடே பொருந்துமாறு, ஆடுஇயல் எடுத்துக்கொண்டு - கூத்தாடுகின்ற இலக்கணம் அமைய மேற்கொண்டு, அந்தணன் - அந்தப் பிராமணன், ஆடுகின்றான் - நகைக்கூத்தினை ஆடலானான், (எ - று.) சாதி - பத்து வகைத் தாள அளவைகளின் ஒன்று. நம்பிக்கு நகைச்சுவை தோற்றும் பொருட்டு அவ் விதூடகன், உடலை வளைத்துச் சிறிது முன்புறத்தும் குனிந்துகொண்ட வடிவத்தோடே, பாடலைச் சாதி என்னும் பாணியோடே இலயங்கொள்ளுமாறு பாடி, கூத்திலக்கண மமைய ஆடாநின்றான் என்க. | (436) | | நம்பி நகைச்சுவையான் மகிழ்தல் | வேறு | 1567. | பாடு பாணியி லயம்பல தோற்றி யாடி யாடிய சதித்தொழில் செய்ய| |
| | | |
|
|