பக்கம் : 980 | | இதுவுமது | 1573. | வாதம் வெல்லும் வகையா ததுவென்னில் ஓதி 1வெல்ல லுறுவார்களை யென்கை 2கோது கொண்ட வடிவிற் றடியாலே மோதி வெல்வ னுரைமுற் றுறவென்றான். | (இ - ள்.) வாதம் வெல்லும் வகை யாது என்னில் - நீ வாதத்திலே எவ்வாற்றால் வெல்வாய் என்று வினவின், அது - அஃதாவது, ஓதி வெல்லல் உறுவார்களை - வேதமொழிகளை விளம்பி என்னை வெல்லத் தொடங்கும் அப்பிராமணர்களை, என்கை - யான் எனது கையிலே கொண்டுள்ள, கோதுகொண்ட வடிவிற் றடியாலே - வளைவினையுடைய வடிவிற்றாய இந்தத் தடியாலே, உரைமுற்றுற - அவர்கள் மொழி முடிந்து போகும்படி, மோதி - தாக்கி, வெல்வன் என்றான் - வென்று விடுவேன் என்று கூறினான், (எ - று.) கோது - ஈண்டு வளைவு. வேதம் வல்வரை நீ எவ்வாறு வெல்வாய் என வினவுதியாயின் கூறுவல், வாய்மொழியாலே ஓதி ஓதி வெல்ல முற்படும், அவ் வேதியரை, யான் என் கையிலுள்ள வளைதடியாலே நன்கு மோதி மோதி அவர் வாய்திறவாதவாறு செய்து வெல்வேன் என்றான் என்க. | (443) | | நம்பி விதூடகனோடு பூம்பொழில் புகல் | 1574 | நன்று 3வாதமிது காண்டு மெனப்போய்ச் சென்று சோலைமதில் 4சேருபு வாயில் ஒன்று 5காவலுழை யாரொடு கூடிப் பொன்றி லாதபுக ழான்பொழில் புக்கான். | (இ - ள்.) நன்று - நல்லது, வாதம் இது காண்டும் என - இவ்வாதப் போரை யாமும் காண்பாம் என்று, போய்ச் சென்று - நடந்து சென்று, சோலை - அப்பூம்பொழிலின், மதில் சேருபு - மதிலை அடைந்து, வாயில் ஒன்று காவல் உழையாரொடு கூடி - அப்பொழிலின் மதில் வாயிலிலே காவல் செய்கின்ற பணி மகளிரோடே கூடி, பொன்றிலாத புகழான் - அழிவில்லாத புகழையுடைய திவிட்டநம்பி, பொழில்புக்கான் - அப்பொழிலினூடே புகுந்தான், (எ - று.) | |
| (பாடம்) 1 வெல்லுறுவார்களை. 2 கோதில். 3வாதம் நனி காண்டும் மெனப்போய். 4 வாயிலதெய்தி. 5 காவினுழையாரொடுங் கூடி. | | |
|
|