பக்கம் : 983 | | அப்பொழில் சந்தனமரமும், மாமரமும் நெருங்கி வளைந்து தேனோடு குலாய்த் தாழ்ந்து மதுமாரி தயங்கித் தாதுக்களை மிகப் பொழியும் என்க. | (448) | | 1579. | மாவின் மேல்வளர மாதவி வைத்த தாவி லாததழை 1சார்வன நோக்கிக் காவு காமர்கனி கண்டது கையாற் கூவு மோடியவை 2கொள்குவ மென்றான். | (இ - ள்.) மாவின்மேல் வளர் அ மாதவி வைத்த தா இலாத தழை - தேமா மரத்தின்மேலே படர்ந்து வளரா நின்ற அந்தக் குருக்கத்திக் கொடி தளிர்த்த குற்றமற்ற பூந்தழை, சார்வன - தம்மெதிரே ஒல்கி அணுகுவன வற்றை, நோக்கி - பார்த்து, காவு - இப்பொழில், காமர் கனிகண்டது - அழகிய கனிகளைக் கனிந்துள்ளது, கையால் - மேலும் தனது கைகளாலே, கூவும் - நம்மை அழைக்கின்றது, ஓடி - ஆதலால் யாமும் விரைந்து சென்று, அவை கொள்குவம் என்றான் - அப்பொழில் நமக்கு உபசாரமாக அளிக்கும் அக்கனிகளை ஏற்றுக் கொள்வோம் வேந்தே என்று விதூடகன் விளம்பினான், (எ - று.) கனிகண்டது - கனிந்துள்ளது. தேமாவின் மேற்படர்ந்து, தழைத்த குருக்கத்தியின் தழையுடைய கொடி, தாழந்தசைதலை நோக்கி, இப்பொழில், கனிந்துளது மேலும் தன் கையாலே நம்மை அழைக்கின்றது, ஆதலால் அரசே! யாமும் விரைந்து சென்று, அப்பொழில் தரும் கனிகளை ஏற்றுக்கொள்வேம்; என்று விதூடகன் விளம்பினான், என்க. | (449) | | 1580. | கூடி வண்டுகுடை யுங்குளிர் காவில் ஓடி மண்டிவரு வானொரு பாலாற் சேடு கொண்டகனி சிந்தின கண்டு மூடு கொண்ட 3மதி யான்முனி வுற்றான். | (இ - ள்.) கூடி வண்டு குடையும் குளிர் காவில் - குழாங் கொண்டு வண்டுகள் மலர் கிண்டும் குளிர்ந்த பூம்பொழிலின் கண், ஓடி மண்டி வருவான் - ஓடிச் சுழன்று வருகின்ற விதூடகன், ஒருபாலால் - ஆண்டொரு சார், சேடுகொண்ட கனி - அழகுமிக்க கனிகள், சிந்தின கண்டு - சிதறி வீழ்ந்தவற்றைப் பார்த்து, மூடு கொண்ட மதியான் - அறியாமையால் மூடப்பட்ட மனத்தையுடைய அப்பார்ப்பனன், முனிவுற்றான் - சினங் கொள்வானாயினன், (எ - று.) | |
| (பாடம்) 1 தழைவன. 2 கொள்ளுவ. 3 மதியன், மதியோன். | | |
|
|