பக்கம் : 985
 

     அதுகேட்ட நம்பி, வேதியனே! இப்பூம்பொழில் வாளேந்திய மறவர் பலர்
புரிசையிடத்தே இருந்து காக்கப்படுவதாகவும், நீ காவலற்றது என்றற்குக் காரணம் யாது
என்றான் என்க.

(452)

 

விதூடகன் ஈண்டு கள்வரைக் கண்டேன் எனல்

1583. 1அருமு கத்தகனி யாயின வெல்லாம்
ஒருமு கத்தனக ளன்றியு திர்த்துத்
தருமு கத்தர்வரு வார்தறு கண்ணார்
கருமு கத்தருளர் காவல்களி லென்றான்.
 
     (இ - ள்.) அருமுகத்த கனி ஆயின எல்லாம் - பெறற்கரிய பருவம் வாய்ந்த கனிகள்
எல்லாம், ஒரு முகத்தனகள் அன்றி - ஒரு திசையினன்றிப் பல திசைகளிடத்தும்
வீழ்வனவாம்படி, உதிர்த்து - உதிரும்படி செய்து, தருமுகத்தர் - மரங்களிடத்தேயே
எப்பொழுதும் வாழ்வாராய், வருவார் - வருகின்ற, தறுகண்ணார் - இரக்கமிலாக் கயவர்கள்,
கருமுகத்தர் உளர் - கரிய முகத்தையுடைய கள்வர் பலர் ஈண்டுள்ளனர், காவல்கள் இல்
என்றான் - அக்கள்வரைக் கடியும் காவல் ஈண்டில்லை என்று கூறினான், (எ - று.)

     அரு முகத்த கனிய - அரிய பருவம் வாய்ந்த கனி என்க.

     அரிய கனிகள் நான்கு திசைகளினும் வீழும்படி உதிர்க்கின்ற தறு கண்ணராகிய கரிய
முகங்களையுடைய கள்வர் பலர் மரங்களிலே உளர்; காவலரோ ஒருவருமிலர் என்றான்
என்க.

 (453)

 

திவிட்டன் விதூடகனை அசதியாடல்

1584. யாவர் யாவரவ ரெங்குள ரென்னக்
காவு மேவுமுசு வின்கலை காட்ட
2வாவவர் கள் 3வரத னாலெழு நாம்போய்த்
தேவி காவுநனி சேர்குவ மென்றான்.
 
     (இ - ள்.) யாவர் யாவர் - யார்! யார்!, அவர் எங்குளர் என்ன - அத்தகைய கள்வர்
எவ்விடத்தே உள்ளனர் என்று அரசன் விரைந்து வினவ, காவு மேவும் முசுவின்
கலைகாட்ட - விதூடகன் அப்பொழிலிடத்தே உறையும் ஆண் குரங்குகளைக் காட்டினனாக;
ஆ அவர் கள்வர் அதனால் எழுநாம் போய் - அந்தோ அவர் கள்வர்கள்தாம்
ஆகையாலே விரைந்து எழுக யாம் சென்று, தேவி காவு - இக்கள்வர் வாராத
சுயம்பிரபையின் பொழிலை, நனிசேர்குவம் - விரைந்து எய்துவோம், என்றான் - என்று
திவிட்டன் அஞ்சினான்போற் கூறினான், (எ - று.)
 

     (பாடம்) 1 அருமுகத்த களியாயின. 2 வாவர்கள். 3 வரசனாலெழு நாம்போய்த்.