பக்கம் : 987 | | தமாலவீதி - பச்சிலைமரச் செறிவூடே செல்லும் வழி. தமால வீதியைக் கண்டு இருள் என வேதியன் அஞ்ச, நம்பி, இது இருளன்று சோலையே காண் எனத் தெருட்ட, வேதியன் அச்சம் நீங்கினான் என்க. | (456) | | மகிழமரம் கவசமணிந்ததேன்? எனல் | 1587. | வாலிதழ் வீழ்தரு 1மகிழ்தன் றாண்முதற் சாலிகை புக்கது தயங்கு தாரினாய் சோலையு 2மமர்த்தொழி றொடங்கு மோவென வேலைநீர் வண்ணனை வெருண்டு நோக்கினான். | (இ - ள்.) வால் இதழ் வீழ்தரு மகிழ் - தூயமலரை உகுக்கின்ற மகிழமரம், தன் தாள்முதல் - தனது அடிப்பகுதியிலே, சாலிகை புக்கது - கவசம் அணிந்துளது, தயங்கு தாரினாய் - திகழ்கின்ற மாலையை யுடையோய், சோலையும் - இதுபோன்ற பொழில்களும், அமர்த்தொழில் தொடங்குமோ என - போர்த்தொழில் செய்வதுண்டேயோ என்று வினவியவாறே, வேலை நீர் வண்ணனை - கடல்வண்ணனாகிய திவிட்டனை, வெருண்டு - உளம் வெருண்டவனாய், நோக்கினான் - பார்த்தான், (எ - று.) மகிழமரம் கவசம் அணிந்துளது; சோலைகளும் அரசர் போன்று போர்க்குச் செல்லுதல் உண்டோ என, அஞ்சி நம்பியை வினவினான், என்க. | (457) | | நம்பியின் விடை | 1588. | அஞ்சலிங் கமர்த்தொழி லில்லை யாவதும் மஞ்சிவர் 3மகிழந்தன் வயவு நோய்கெடூஉப் பஞ்சிவ ரல்குலார் பவழ வாயினால் அஞ்சுவை 4நறவமீங் குமிழ ஆனதே. | (இ - ள்.) அஞ்சல் - பார்ப்பன மகனே அஞ்சாதே கொள், இங்கு - இவ்விடத்தே, யாவதும் - ஒருசிறிதும், அமர்த்தொழில் இல்லை - போர்த் தொழில் நிகழமாட்டாது, மஞ்சு இவர் மகிழந்தன் - முகில்தவழும் இம்மகிழ மரத்தினுடைய, வயவுநோய், கெடூஉ - வயவுநோய் அகலும் பொருட்டு, | |
| (பாடம்) 1 மகிழதன். 2 மாத்தொழில். 3மகிழந்தன. 4 நறவறங்குமிழப்பட்டதே, நறவமிங்குழப்பமிட்டதே. | | |
|
|