பக்கம் : 988 | | பஞ்சு இவர் அல்குலார் - பஞ்சாடைகள் தழுவிய அல்குலையுடைய மாதர், பவழவாயினால் - பவழம் போன்ற தம் அழகிய வாயினாலே, அஞ்சுவை நறவம் - அழகிய சுவையுடைய மதுவினை, ஈங்கு - இவ்வடிமரத்திலே, உமிழ - உமிழ்தலாலே, ஆனது - இக்கவசம் உண்டாயிற்று, (எ - று.) வயவுநோய் என்றது அரும்பீனாதுநிற்றலை. அரும் பீனற்கு மகளிர் அதன்மீது உமிழ்ந்துள்ளனர் என்க. அதுகேட்ட நம்பி, விதூடகனே! அஞ்சற்க! இங்குப்போர் ஏதும் நிகழாது! இம் மகிழ மரத்தின் வயாநோய் தீர்த்தற்பொருட்டு இதனடி மரத்தே மகளிர் தம் வாயின் மதுவை உமிழ்ந்தமையால் இக்கவசம் தோன்றலாயிற் றென்றான் என்க. | (458) | | இதுவுமது | 1589. | ஆங்கத னாவியா லரவத் தேனெழா ஈங்கிதன் றாண்முத லிருள மொய்த்தன ஓங்கிய கேள்வியா யுணர்ந்து கொள்கென வீங்கிய கழலவன் விளங்கச் சொல்லினான். | (இ - ள்.) ஆங்கு அதன் ஆவியால் - (அக்கவசம் எவ்வாறு உண்டாயிற் றெனில்) அவ்வாறு உமிழப்பட்ட நறவத்தின் மணத்தாலே, அரவத் தேன் எழா - ஒலியுடைய வண்டுகள் எழுந்து, ஈங்கு இதன்தாள் முதல் இருள மொய்த்தன - இவ்விடத்ததாகிய இம்மகிழ மரத்தினது அடிப்பகுதி முழுதும் இருண்டுபோமாறு மொய்த்துள்ளன, ஓங்கிய கேள்வியாய் - பெருகிய கேள்விச் செல்வமுடைய பார்ப்பனனே, உணர்ந்து கொள்கென - அறிந்து கொள்க என்று, வீங்கிய கழலவன் - பரிய வீரக்கழலையுடைய திவிட்டன், விளங்கச் சொல்லினான் - அவ்விதூடகனுக்கு விளங்கும்படி விளம்பினான், (எ - று.) ஓங்கிய கேள்வியாய் : இகழ்ச்சிக் குறிப்பு. மகளிர் உமிழ்ந்த தேன் மணத்தலாலே கரிய வண்டுகள் இம் மகிழ மரத்தின் அடிப்பகுதி மறையுமாறு மொய்த்துள்ளன. அவையே கரிய கவசம் போல் உனக்குத் தோன்றுகின்றன காண்! என்றான் என்க. | (459) | | மல்லிகைமலர் சிவந்தனவாதற்குக் காரணம் கூறல் | 1590. | முள்ளரை முருக்கினோ டெழுந்த மல்லிகை வள்ளிதழ் குருதியின் வடிவி லூழ்த்தன கள்ளவிழ் கண்ணியாய் விரியு நாளெனத் 1தெள்ளிதி னதனையுந் தெளியச் செப்பினான். | |
| (பாடம்) 1 தெள்ளிதின றவற்றையும். | | |
|
|