பக்கம் : 989
 

     (இ - ள்.) கள் அவிழ் கண்ணியாய் - தேன்துளிக்கும் முடி மாலையை உடைய
பார்ப்பன மகனே, முள் அரை முருக்கினோடு எழுந்த மல்லிகை - முட்களையுடைய
அடிப்பகுதியையுடைய முருக்க மரத்தோடே இணைக்கப் பட்டெழுந்த மல்லிகைக் கொடி,
விரியும் நாள் - தான் மலரும் பருவத்தே, வள் இதழ் குருதியின் வடிவில் - வளப்பமுடைய
தன் இதழ்கள் குருதி போன்ற சிவந்த நிறமுடையனவாய், ஊழ்த்தன - மலர்ந்தன, என -
என்று, அதனையும் - சிவந்த மல்லிகை மலர்க்குரிய காரணத்தையும், தெள்ளிதின்
தெளிய-தெற்றெனத் தெளிந்து கொள்ளுமாறு, செப்பினான்-கூறினான், (எ- று.)

     முருக்கமரத்தின் அயலிலே மல்லிகைக் கொடியை நட்டு அது சிறிது வளர்ந்தபின்
முருக்கமரத்தின் அடியிலே துளையிட்டு மல்லிகைக் கொடியை அத்துளைவழிப் புகுத்தி
மண்ணாற் பொதிந்து அம் முருக்க மரத்தின் மீதே பரட விட்டால் அம் மல்லிகைமலர்
முருக்கமலர் போன்று சிவப்பாக இருக்கும் என்று கூறுப.

 (460)

 

அசோக மரத்தில் மாதர்கள் அலத்தக
அடிச்சுவட்டை விதூடகன் தளிர் என்று எண்ணி வினாதல்

1591. கடிமிசை விரிதருங் காமர் கொம்பரின்
முடிமிசை யெழுதரு முறிகொ ளீர்ந்தளிர்
அடிமிசை யீன்றதிவ் வசோக மென்கொலோ
கொடிமிசை யெழுதிய குவவுத் தோளினாய்.
 
     (இ - ள்.) கடிமிசை விரிதரும் காமர் கொம்பரின் முடிமிசை - மணத்தோடே மேலே
விரியும் அழகிய தம் கொம்புகளின் நுனியிலேதான், முறிகொள் ஈர்ந்தளிர் - தளிர்க்கும்
ஈரிய தளிர்கள், எழுதரும் - தோன்றும், இவ்வாறாக, இவ்வசோகம் - இந்த அசோகமட்டும்,
அடிமிசை ஈன்றது என்கொலோ - தனது அடிமரத்திலே தளிரீன்றுளது அதற்குக் காரணம்
யாதோ, மிசைகொடியெழுதிய - மேலே பூங்கொடிகள் சந்தனக்குழம்பாலே வரையப்பெற்ற,
குவவுத் தோளினாய்-திரண்ட தோளையுடைய வேந்தே,(எ-று.)

     அரசே! அசோக மரங்கள் தம் கொம்புகளின் நுனியிலேயே தளிர் விடும்,
இவ்வசோகமட்டும் இலைகளில்லாத அடிமரத்திலே தளிர்த்ததற்குக் காரணம் என்னை?
என்றான் என்க.

(461)

 

நம்பியின் விடை

1592. 1இலைத்தலை யீர்ந்தளி ரல்ல வீங்கிதன்
மலைத்தகு வயவுநோ 2ய் தீர வைத்தன
 

     (பாடம்) 1 முலைத்தலை. 2 யதிர. சூ.-63