பக்கம் : 990
 
  கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி
அலத்தகச் சுடரென வறியக் காட்டினான்.
 
     (இ - ள்.) இலைத்தலை ஈர்ந்தளிர் அல்ல - இலைக்கு முதலாகின்ற ஈரிய தளிர்கள்
அல்ல, ஈங்கு இதன் - இவ்வசோகின், மலைத்தகு வயவுநோய் தீர - திகைப்பைச் செய்யத்
தகுந்த வயவுப் பிணி தீரும் பொருட்டு, கலைத்தலை மகளிர் - கலைத்தொழிலிலே
தலையாய மகளிர்கள், தம் காமர் சீறடி - தம்முடைய அழகிய சிற்றடிகளாலே, வைத்தன -
வைக்கப்பட்டன வாகிய, அலத்தகச் சடர் - செம்பஞ்சுக்குழம்பின் ஒளிகளாம், என - என்று,
அறியக் காட்டினான் - அவ்விதூடகன் உணருமாறு உரைத்தான், (எ - று.)

     அதுகேட்ட நம்பி, விதூடக! இவ்வசோக மரத்தின் அடிப் பகுதியிலே தோன்றுவன
தளிர்கள் அல்ல; அவை, மகளிர்கள் இதன் வயவு நோய் தீர்த்தற் பொருட்டுத் தம்
அடிகளால் மிதித்தபொழுது அவ்வடிகளின் அலத்தகக் குழம்புபட்ட குறிகளேகாண்
என்றான் என்க.

(461)

 

விதூடகன் திவிட்டனை அசதியாடல்

1593. 1காவிவாய் விலங்கிய கருங்கண் வெம்முலைத்
தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும்
மேவியாங் கலர்ந்திடு நின்னை வென்றதால்
ஆவியா ரசோகின தமைதி வண்ணமே.
 
     (இ - ள்.) வாய் விலங்கிய காவி கருங்கண் - வாய்விரிந்த நீலோற்பல மலர் போன்ற
கரிய கண்களையும், வெம்முலைத் தேவியார் - விருப்பந்தரும் முலைகளையும் உடைய
கோப்பெருந்தேவியார், சீறடி - சிறிய அடிகளை, சென்னி சேர்த்தலும் - உன்னுடைய
முடியிலே சூட்டியபோது, மேவி - விரும்பி, ஆங்கு - அப்போது, அலர்ந்திடும் -
மனமகிழ்கின்ற, நின்னை - வேந்தனாகிய உன்னை, ஆவியார் அசோகினது
அமைதிவண்ணம் - மணம் பொருந்திய இவ்வசோக மரத்தினது பெருந்தன்மை, வென்றது
ஆல் - வென்றுவிட்டது ஆகும், (எ - று.)

     மகளிர் சிற்றடி நின் முடியிலே பட்டால் நீ மகிழ்கன்றனை; இவ்வசோகம் தன்
அடியில் அவர் அடிபடுந்துணையானே மலர்வதனால் உன்னை வென்றது என்றான் என்க.

(462)

 

திவிட்டன் மலர்மாலையால் விதூடகனைப் புடைத்தலும்
அவன் அச்சுறுத்தலும்
1594 .மாதவன் மொழிதலு மன்ன னாங்கொரு
போதினாற் புடைத்தனன் புடைத்த லோடுமிங்
 
 

     (பாடம்) 1 காவியால்.