பக்கம் : 991 | | | கேதிலா ளொருத்திக்கா வென்னைச் 1செய்தவித் தீதெலாந் தேவிக்குத் தெரியச் செப்புவேன். | (இ - ள்.) மாதவன் - அவ்விதூடக வேதியன், மொழிதலும் - இவ்வாறு கூறியவுடனே, மன்னன் - திவிட்டமன்னன், ஆங்கு ஒரு போதினால் புடைத்தனன் - அவ்விடத்தே ஒரு மலர் மாலையாலே அவனை அடித்தனன், புடைத்தலோடும் - அடித்தவுடனே, இங்கு - இவ்விடத்தே, ஏதிலாள் ஒருத்திக்கா - அயலாளாகிய ஒருத்தியின் பொருட்டு, என்னை - பார்ப்பனனாகிய என்னை, செய்த இத்தீதெலாம் - அடித்த இத்தீச்செயலை முழுதும், தேவிக்குத் தெரிய - கோப்பெருந்தேவி உணரும்படி, செப்புவேன் - கூறுவேன் என்றான், (எ - று.) என்றான் என்பது சொல்லெச்சம். அங்ஙனம் அசதியாடிய விதூடகன் உரையாற் சினந்தான் போன்று. நம்பி, ஒரு பூமாலையாலே அவனை அடித்தானாக. வேதியன், அரசே நீ ஒரு பெண்ணின் பொருட்டுப் பார்ப்பனனாகிய என்னை அடித்த இத்தீமையைத் தேவியறியக் கூறுவேன் காண் என்றான் என்க. | (463) | | திவிட்டன் விதூடகனுக்கு முகமன் விளம்பல் | 1595. | என்றலு மெரிமணிக் கடகக் கையினால் அன்றவன் கைத்தலம் 2பிடித்தங் கியாவது 3மின்றிற லினிச்செய்த லில்லே னச்சொலிச் சென்றொரு மணிச்சிலா வட்ட மேறினான். | (இ - ள்.) என்றலும் - என்று அப்பார்ப்பனன் கூறியவுடன், எரிமணிக்கையினால் - ஒளிருகின்ற மணிக்கலன் அணிந்த தன் கையாலே, அன்று அவன் கைத்தலம் பிடித்து - அப்போது அவ்விதூடகனின் கையைப் பற்றிக்கொண்டு, யாவதும் - ஏதும், இன் திறல் - இனிய திறல் உடைய பார்ப்பன மகனே, இனிச் செய்தல்இல் - இனி உன்னை யான் தீங்கு செய்வேன் அல்லன், எனச் சொலி - என்று முகமன் கூறி, சென்று - அவணின்றும் போய், அங்கு ஒரு மணிச்சிலாவட்டம் ஏறினான், அவ்விடத்துளதாகிய மணியாலியன்ற ஒரு பளிக்கு மேடையிலே ஏறுவானாயினன், (எ - று.) இன்றிறல் : அன்மொழித் தொகை. அவ்வாறு கூறிய வேதியனின் கைகளைப் பற்றிக்கொண்டு, நம்பி, நண்பனே! இனி இத்தகைய தீமை யான் ஏதுஞ் செய்யேன்; வருதி! என்று அழைத்துக்கொண்டு ஒரு மணிச்சிலாதலத்தே ஏறினான் என்க. | (464) | |
| (பாடம்) 1செய்தவத். 2 பிடித்தியாவது. 3 மின்றிறல் பின்னினிச் செய்தலில் லெனச். | | |
|
|