பக்கம் : 992 | | விதூடகன் சிலாதலத்திற் றோன்றுந் தன்னிழல் கண்டு வெரூஉதல் | 1596. | சொரிகதிர் மணிச்சிலா வட்டஞ் 1சூழ்ந்தனன் அருகுநின் றந்தண னமர்ந்து நோக்கியே வெருவிய மனத்தினன் விதலை 2மேனியன் பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான். | (இ - ள்.) சொரிகதிர் மணிச்சிலாவட்டம் - பொழிகின்ற சுடர்களையுடைய அம்மணிகள் அழுத்திய பளிங்கு மேடையை, சூழ்ந்தனன் - சுற்றி வந்தவனாய், அருகுநின்று - அதன் அண்மையிலே நின்றுகொண்டு, அந்தணன் - அவ்விதூடகன், அமர்ந்து நோக்கி - பொருந்தப் பார்த்து, வெருவிய மனத்தினன் - அஞ்சிய நெஞ்சினனாய், விதலை மேனியன் - உடல் நடுங்கியவனாய், பெருகிய தலையினன் - விரிந்த மயிரையுடைய தலையையுடையோனாய், பெயர்ந்து - அவ்விடத்தினின்றும் அகன்று, பின்றினான் - பின்னிட்டான், (எ - று.) ஒளிவீசும் அம்மணிச் சிலாவட்டத்தை வேதியன் சுற்றிவந்து, கூர்ந்து நோக்கி அஞ்சி நடுங்கியவனாய்ப் பின்னிட்டு ஓடினான் என்க. | (466) | | திவிட்டன் வினாதலும் விதூடகன் இச்சிலாவட்டத்தே ஒரு பூதமுளதென்றலும் | 1597. | யாதுகண் டனையென 3விதனுள் வாழ்வதோர் பூதமுண் டதுபுடைத் துண்ணு மாதலால் ஏதமுண் டிங்கினி யிருப்பின் வல்லையே போதவென் றந்தணன் புலம்பிக் கூறினான். | (இ - ள்.) யாது கண்டனை என - ஏடா பார்ப்பன மகனே! ஏன் அஞ்சுகின்றாய், நீ இப்பொழுது என்ன கண்டனை என்று திவிட்டன் வினவ, இதனுள் வாழ்வது ஓர் பூதம் உண்டு - அரசே! இப்பளிங்கு மேடையினூடே உறைவதாகிய ஒரு பூதம் உளது, அது - அப்பூதம், புடைத்துண்ணும் - நம்மை அடித்துக் கொன்று தின்றுவிடும், இங்கு இனி இருப்பின் - இவ்விடத்தே யாம் இனி இருப்போமாயின், ஆதலால் - ஆகையாலே, போத - அரசே! வருக வருக, என்று அந்தணன் புலம்பிக் கூறினான் - என்று அவ்விதூடகன் அழுது கூறுவானானான், (எ - று.) |
| (பாடம்) 1 சேர்ந்தனன். 2மேனியான். 3 வதனுள். | | |
|
|