பக்கம் : 993 | | அவ்வாறு ஓடுகின்ற விதூடகனை, நம்பி ஏடா! பார்ப்பன மகனே! இங்கு நீ அஞ்சுதற்கு யாது கண்டனை என, அரசே! இதனுள் ஒரு பூதம் உளது; அது நம்மை அடித்துத் தின்றுவிடும்; ஆதலால், விரைந்துயாம் போய்விடவேண்டும்; வருதி! வருதி! என்று புலம்பியுரைத்தான் என்க. | (467) | | நம்பி அப்பூதம் எத்தகைய தெனலும், அதற்கு விதூடகன் விடையும் | 1598. | யாதத னுருவென 1வெரிபொன் னோலையும் சோதிசூழ் சுடர்மணிக் குழையுந் துன்னிய காதொடு கண்பிறழ்ந் துளது கைகுறி தூதிய வயிற்றதென் றுருவ மோதினான். | (இ - ள்.) யாது அதன் உரு என - ஆயின் அப்பூதத்தின் உருவம் எத்தகையது என்று திவிட்டன் வினவ, பொன்னோலையும் - பொன்னோலை யையும், சோதிசூழ் சுடர்மணிக்குழையும் துன்னிய காதொடு - ஒளிபடர்ந்து சுடர்கின்ற குண்டலங்களையும் பொருந்திய காதுகளோடே, கண் பிறழ்ந்து உளது - கண்கள் மருண்டு பிறழ்ந்தனவாக உளது, கைகுறிது - குறுகிய கைகளை உடையது, ஊதிய வயிற்றது - பருத்த வயிற்றை உடையது, என்று - என்றிவ்வாறு, உருவம் ஓதினான் - தான்கண்ட பூதத்தின் உருவத்தை எடுத்துக் கூறினான், (எ - று.) நம்பி நீ கண்டபூதம் எத்தகையது என்று வினவ, பொன்னோலை யையும் குண்டலங்களையும் உடையதாய், கண்கள் பிறழ்ந்து, குறிய கையும், ஊதிய வயிறும் உடையது அப்பூதம் என்றான் என்க. | (468) | | நம்பி அது பூதமன்று நின்னிழல்காண் எனல | 1599. | மின்னிழற் பூணவன் மெல்ல நக் கது நின்னிழற் 2காணென நிற்க நின்னுரை என்னிழ லென்னொடு மியங்கி னல்லது கன்னிழ லுட்புகிற் காண்ட லாகுமே. | (இ - ள்.) மின்னிழல் பூணவன் மெல்ல நக்கு - மின்னொளி மிக்க அணிகலன்களையுடைய திவிட்டன் புன்முறுவல் கொண்டு, அது - அவ்வுருவம், நின்நிழல்காண் என - உன்னுடைய நிழலேயாம் பிறிதன்றுகாண் என்று கூற, நின்னுரை நிற்க - அரசே உன்னுடைய மொழி அமைக, என்நிழல் என்னொடும் இயங்கின் அல்லது - என்னுடைய நிழல் என்னொடு கூட இயங்குமேயன்றி, கல்உள் நிழல் புகில் காண்டல் ஆகுமே - இக்கல்லினுள் அந்நிழல் புகுமாயின் அதனை நாம் எவ்வாறு காணுதல் கூடும்? (எ - று.) |
| (பாடம்) 1 வலர் பொன். 2காணது. | | |
|
|