பக்கம் : 994 | | அவ்வாறு நின்னாற் காணப்படும் உருவம் உன்னடைய நிழலன்றிப் பிறிதில்லை என்று நம்பிகூற, விதூடகன், அரசே! என்னிழல் ஆயின் அஃது என்னோடு இயங்குவதன்றி இக் கல்லினுள் புகுமோ! புகுந்தால் பின்னர் அதனை யாம் காணுதல் கூடுமோ! கூடாதாகலின் அது பூதமே! என்றான்; என்க. | (469) | | அஃது அவன் நிழலாதலைக் காரணங்காட்டித் தெளித்தல | 1600. | நின்னிழ லாவது தெளிய 1நின்றொழில் 2இந்நிழற் காணென விறைஞ்சி நோக்குபு தன்னிழ றான்செய்வ செய்யத் தான்தெளிந் தின்னிழ லிருந்தன னிலங்கு நூலினான். | (இ - ள்.) நின்நிழல் ஆவது தெளிய - பார்ப்பன மகனே அவ்வுருவம் உன்னுடைய நிழலே யாம் என்பதை நீ தெரிந்து கொள்ளும் பொருட்டு, நின்றொழில் இந்நிழல்காண் - நீ செய்யும் தொழில்களை இந்நிழலும் செய்வதனை அதனிடத்தே காண்க, என - என்று அரசன் கூற, இறைஞ்சி - விதூடகன் தன் கைகளைக் குவித்து வணங்கியபடி, நோக்குபு - அந்நிழலைக் கூர்ந்து நோக்கி, தன்நிழல் தான்செய்வ செய்ய - தனது நிழலாகிய அவ்வுருவமும் கைகளைக் குவித்து வணங்கித் தான் செய்தவற்றைச் செய்ததாக, தான் தெளிந்து - அவ்வாற்றால் அது தன் நிழலே எனத் தெளிந்தவனாய், இலங்கு நூலினான் - விளங்குகின்ற பூணூலையுடைய அவ்விதூடகன், இன் நிழல் இருந்தனன் - ஆண்டுள்ளதோர் இனிய நீழலின் கண்ணே, அமர்ந்திருந்தான், (எ - று.) திவிட்டன், பார்ப்பனனே! அது நின்னிழல் என்று நீ அறியும் பொருட்டு, அது நீ செய்யும் தொழிலெல்லாம் செய்தலைக் காண்! என, அவனும் அவ்வாறே தான் செய்தொழிலை அது செய்தல் கண்டு, நிழலே என்று தெளிந்து, ஒரு மரநிழலிலே இருந்தான் என்க. | (470) | | இருவரும் சிலாதலத்திருத்தல் | 1601. | திருந்திய மணிநகைத் தேவி யிவ்வழி வருந்துணைப் பொழுதுமிம் மணிச்சி லாதலம் பொருந்தின 3பொழினலங் காண்டு மென்றரோ 4விருந்தன ரிருவரு மினிதி னென்பவே. | |
| (பாடம்) நின்னொடு. 2நின்னிழல். 3 பொழினிலம். | | |
|
|