பக்கம் : 997 | | விதூடகன் தனது செயலாலே நம்பியை நகையூட்ட மகிழ்ந்து, நம்பி சிலாவட்டத்தின் மேலே அமைத்த மலரணையிலே மெல்லென இருந்தான் என்க. | (474) | | நம்பியை விதூடகன் இவ்வசோகில் அடிச்சுவடு பொறித்தாள் யார் எனல் | 1605 | .பந்தணையு 1மெல்விரலி பாடக மொடுக்கி வந்தணையு மெல்லையுண் மயங்கியொரு மாற்றம் அந்தணன் 2வினாவவக மீதுநினை வானாய்க் கந்தணைவி லாதகளி யானைபல 3வல்லாய். இதுவும் அடுத்த செய்யுளும் குளகம் | (இ - ள்.) பந்து அணையும் மெல் விரலி - பந்துகள் பயிலா நின்ற மெல்லிய விரல்களையுடைய சுயம்பிரபை, பாடகம் ஒடுக்கி - தனது பாடகம் என்னும் காலணியை ஓசையவித்து, வந்து அணையும் எல்லையுள் - வந்து அம்மணிச்சிலாவட்டத்தை எய்தும்போது, அந்தணன் - விதூடகன், மயங்கி - தான் கண்ட ஒன்றனைத் தெளிந்து கொள்ள மாட்டாதவனாய் மயக்குற்று, ஒருமாற்றம் - அதைத் தெளியும் ஒரு மொழியை, வினாவ - திவிட்டனை வினவுதற்கு, அகம்மீது நினைவானாய் - தன் நெஞ்சத்தே கருதியவனாய், கந்து அணைவிலாத களியானை பல வல்லாய் - கட்டுந்தறியை வெருவி அதனை எய்த மறுக்கின்ற மதமயக்கமுடைய யானைப் போர் பலவற்றினும் வல்லவனாகிய மன்னனே, (எ - று.) நம்பியை, உருக்கரத்துள்ள நங்கை ஒலியவித்து வந்து அணையப் போம் பொழுது, விதூடகன் ஒரு பொருளை ஐயுற்றவனாய் நம்பியை வினாவும் பொருட்டு விளித்தான் என்க. | (475) | | இதுவுமது | 1606. | நிலத்தவள்கொ லன்றிநெடு மால்வரையு ளாள்கொல் அலத்தக வடிச்சுவ டசோகின்மிசை வைத்தாள் உலத்தகைய 4தோளணிகொண் மார்பவுரை யென்ன வலத்தகைய 5னாயமணி வண்ணன்மொழி கின்றான். | |
| (பாடம்) 1மெல்விரல. 2 வினாவ வமிர்தூற மொழிகின்றான். 3வல்லான். 4தோளணிகொண். 5னாகிமணி, னாதிமணி. | | |
|
|