பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை | 10. | நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர் பொழிலகம் பூவையுங் கிளியும் பாடுமே குழலகங் குடைந்துவண்1டுறங்குங் கோதையர் மழலையும் யாழுமே மலிந்த மாடமே. | (இ - ள்.) அகம்நிழல் தவழ்ந்து-உள்ளிடத்தே நிழல்பரந்து; தேன் நிரந்து - மலர்களில் தேன் நிரம்பப்பெற்று; தாதுசேர்-மகரந்தப்பொடி பொருந்திய; பொழில் அகம் - சோலைகளில், பூவையும் கிளியும் பாடும் - நாகணவாய்ப் பறவைகளும் கிளிகளும் பாடாநிற்கும்; மாடம் - அந்நாட்டின் கண்ணுள்ள வீடுகளில்; குழல் அகம் குடைந்து - தஙகூந்தலினூடு புகுந்து; வண்டு உறங்கும் கோதையர் - வண்டுகள் உறங்கப்பெற்ற மாதர்களினுடைய; மழலையும் - நிரம்பா மென்மொழிகளும்; யாழுமே மலிந்த - வீணைப்பாடல்களுமே மிகுந்துள்ளன, (எ - று.) தேன் நிரந்து, வண்டுக் கூட்டங்கள் பரவப்பெற்று எனினும் பொருந்தும். அந்நாட்டுப் பொழிலிடங்கள் நிழல்பரந்து தேன் பரவி மகரந்தப் பொடி நிறைந்து சிறந்து திகழ்கின்றன. அத்தகைய இடங்களிலே நாகணவாய்ப் பறவைகளும் கிளிகளும் இசைபாடி மகிழ்கின்றன. வீடுகளோ பெண்களுடைய இனிய மொழிகளாலும் வீணைப்பாடல்களாலும் இன்ப நிலையங்களாக இலங்குகின்றன. நாகணவாய்ப்புள் கிளியைப்போன்று பேசவும் பாடவும் வல்ல ஒரு பறவை. | ( 10 ) | | |
|
|