(இ - ள்.) ஆங்கு அவள் மொழிந்த போழ்தின் - அவ்வாறு அமிர்த பிரபை கூறியவுடனே, அணங்கினை வணங்கி - அம் மாதவசேனை சுயம்பிரபையைத் தொழுது, மற்று அத்தீங்கனி அமிர்தம் அன்ன திருமொழிப் பண்ணிகாரம் - நுங்கள் விடையாகிய இனிய கற்பகக்கனியையும் அமிழ்தத்தையும் ஒத்த இனிமையுடைய திருமொழியென்னும் தின்பண்டத்தை, வாங்குநீர் உலகம் காக்கும் மன்னவன் பட்டத்தேவி - வளைந்த கடலாற் சூழப்பட்ட உலகத்தைக் காவல் செய்கின்ற பயாபதி மன்னனின் கோப்பெருந்தேவியாகிய, ஓங்கிருங்கற்பினாளுக்கு உய்ப்பன் - புகழால் ஓங்குதலுடைய பெரிய கற்புத்திறம்பூண்ட நும்மாமியாரடிகள்பால் சேர்த்துவன், என்று உணர்த்திப்போனாள் - என்று அறிவித்துப் போவாளாயினள், (எ - று.) அமிர்தபிரபையின் சொற்றிறத்தை உயர்ந்த மாதவசேனை அச்சொல்லை “தீங்கனி யமிர்தம் அன்ன திருமொழிப் பண்ணிகாரம்Ó என்று போற்றும் அழகு பெரிதும் சுவை யுடைத்தாதல்காண்க. |