1023. | சீறடிப் பரடு தோயுஞ் 1சிலம்பிணை 2திருந்த வைப்பன் வீறுடை நங்கை 3வேந்தன் கவான்மிசை 4யிருத்தி யென்னும் சேறுடைக் கோதை மேலாற் சிறந்துவார் கூந்தல் கையால் வேறிடத் 1துருவல் செய்ய விரும்பிய மனத்த னானான். | (இ - ள்.) வேந்தன் - திவிட்டநம்பி, வீறுடை நங்கை - சிறப்புமிக்க சுயம்பிரபையே !, கவான் மிசை யிருத்தி - நீ என் தொடையின்மேல் அமர்வாயாக, சீறடிப் பரடு தோயும் - உன்னுடைய சிற்றடிகளின் பரடுகளிலே உராய்கின்ற, சிலம்பினை - சிலம்புகளை, திருந்த வைப்பன் - திருத்தமுறச் செய்வேன் - என்பான் - என்று கூறுவான், மேலால் - மேலே, சேறுடைக் கோதை - நறுமணச் சாந்தோடு கூடிய மலர்மாலையால், சிறந்து - சிறப்புற்று, வார் கூந்தல் - நீண்ட அளகக் கற்றையை, வேறிடத்து கையால் உருவல் செய்ய - ஆங்கோர் இடம் தொட்டுத் தன்கையால் உருவுதலை, விரும்பிய மனத்தன் ஆனான் - விரும்புகின்ற நெஞ்சன் ஆயினான், (எ - று.) திவிட்டன் சிலம்பு திருத்துவல் கவான் மிசை யிருத்தி என்பான் கூந்தலைக் கையால் உருவப் பெரிதும் விரும்புவதன் என்க. | ( 197 ) | | |
|
|