1038.

3அரும்பிவரு மரவிந்த 4மறிவரன
     தடிநிழல தடைந்தோ மென்று
சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து
     சுடருமிழ்ந்து துளும்பும் போலுஞ்
5சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து
     சுடருமிழ்ந்து துளும்பு மாயின்
6விரும்பினராய்த் தொழுதெழுவார் மெய்ம்மறப்பு
     முண்மகிழ்வும் வியப்போ வன்றே.

       (இ - ள்.) அரும்பிவரும் அரவிந்தம் அரும்பித் தோன்றுதலையுடைய தாமரைமலர்,
அறிவானது அடிநிழல் அடைந்தோம் என்று - அருகனுடைய திருவடிநீழலை எய்தும்
சிறப்பைப் பெறறோம் என்னும் களிப்பால், சுரும்புஇவரி இசைபாட - வண்டுகள் சூழ்ந்து
இசை பாடாநிற்ப, செம்மாந்து - இறுமாப்புற்று, சுடருமிழ்ந்து - ஒளிகான்று,
துளும்பும்போலும் - தேன் துளும்பாநிற்கும், சுரும்புஇவரி இசைபாடச் செம்மாந்து சுடர்
உமிழ்ந்து துளும்பும் ஆயின் - நீழலடைந்த மாத்திரையானே தாமரை வண்டுகள் சூழ்ந்து
தன் இசையைப் பாடாநிற்ப இறுமாப்புற்று ஒளிகான்று தேன்துளும்புவதாயின், விரும்பினரா
தொழுதெழுவார் - அவ்வருகக்கடவுளின் சேவடிகளை விழைந்தவர்களாய் உறங்
கியெழுமமயத்தும் தொழுதே எழுகின்ற அடியார்கள் எய்தும், மெய்மறப்பும் உள்மகிழ்வும் -
தம்மை மறத்தலும் உள்ள மகிழ்தலுமாகிய இந்நிலை, வியப்போ ! அன்றே - வியத்தற்குரிய
தொன்றன்று, (எ - று.)

தாமரை அறிவரனது அடி சேர்ந்த நன்மையால், இசை பாடச் செம்மாந்து சுடருமிழ்ந்து
துளும்பும் ; அஃதங்ஙனமாயின், அவனடியை விரும்பித் தொழுதெழுவார், மெய்ம்மறப்பும்,
உண்மகிழ்வும், வியக்கற்பாலன அல்லவே ! என்றாள், என்க.

( 212 )