1053.

நாளைநா ளென்பது 2நனித்துஞ் சேய்த்தென
வாளையா நெடுங்கணீர் மயங்கி யென்னையிக்
கோளையாம் விசும்பிடைக் குளிர்வெண் டிங்களார்
தாளையாம் வணங்குபு தாழ்ந்து கேட்டுமே.

      (இ - ள்.) நாளை நாள் என்பது நனித்தும் சேய்த்தென - நாளையாகிற நாள் என்று
சொல்லப்படுவது மிகவும் சேய்மைத்தாமே என்று ஒருத்திகூற, வாளையாம் நெடுங்கணீர்!
மயங்கி என்னை - மற்றொருத்தி வாள்போலும் நெடிய கண்களையுடைய தோழியீர் நீயிர்
நாளைநாள் நனி சேய்த்தென மயங்குதலாற் போந்தபயன் என்னை, இக்கோளை - இந்த
உட்கோளை, விசும்பிடை ஆம்குளிர் வெண்டிங்களார் - விசும்பின் கண்ணதாகிய குளிர்ந்த
வெண்ணிலாவையுடைய திங்கட் கடவுளை, யாம் தாளை வணங்குபு தாழ்ந்து கேட்டும் ஏ -
யாம் ஒன்றுகூடி அவர்தம் அடிகளை வணங்கி அவர்முன் தாழ்ந்து கேட்போமாக, (என்றாள்)
(எ - று.)

உட்கோள் - நாளைநாள் நனி சேய்த்தென்னும் கொள்கை, திங்களார் நம்
வேண்டுகோட்கிரங்கி விரைந்து இயங்குவரேல் நாளைநாள் நனி அண்மைத்தாம் ஆதலின்
தாழ்ந்து, கேட்டும் என்றாள் என்க. வாளைமீன்போன்ற கண்ணுமாம். ஐ: சாரியை எனினுமாம

( 227 )