(இ - ள்.) மதுக்கடை வழி பிழித்துவலை நாவளைந்து - கள்விற்கும் கடைகளிலே வழிந்து ஒழுகும் கள்ளினது துளிகளைத் தம் நெடிய நாவால் வளைத்துப் பற்றிச் சுவைத்து, ஒதுக்கமும் - மக்கள் வழக்கற்ற ஒதுக்கிடங்களினும், வெறியயர்களனும் - வெறியாட்டயரும் களங்களினும், ஊடுலாய் - ஊடே சென்று சுற்றி, செதுக்கமும் - நாற்சந்திகளிடத்தும், பலிபெறு தெருவும் - தெய்வங்கள் பலி கொள்ளும் தெருக்களிடத்தும், தேர்ந்துபோய் - தமக்குரிய இரையினை ஆராய்ந்து சென்று, கதுப்புகுந்து - மலைமுழைஞ்சுகளிலே புகுந்து, உறங்குபு - உறங்கி, கழுதும் - பேய்களும், சோர்ந்த ஏ - அறிவு சோர்தல் உடையவாயின, ஏ : அசை, (எ - று.) இஃது இடையாமத் தியல்பு கூறிற்று. இதன்கட் பேய்களின் செயல் அழகாகக் கூறப்பட்டமை காண்க. செதுக்கம் - சதுக்கம் ; நாற்சந்தி. கது - குகை. ஒதுக்கம் - மக்கள் வழக்கற்றவிடம். |