(இ - ள்.) தூண்டிய சுடர்விளக்கு அன்ன கன்னியோடு - தூண்டப்பட்ட ஒளிப்பிழம்பையுடைய விளக்கைப் போன்ற சுயம்பிரபையுடனே, ஆண்டகை - திவிட்டநம்பி, அழல் வலம் செய்யும் ஆர் அணி - திருமணவினையில் தீயை வலம்வரும் பேரழகு, காண் தகை உடைத்து - காணத்தகும் மாண்புடையதாகலின், அது நாம் காண்டும் என - அக்காட்சியை யாமும் சென்று காண்போம் என்று கருதியவளைப்போன்று, ஈண்டிய கதிரவன் - செறிந்த சுடரையுடைய ஞாயிறு, உதயம் ஏறினான் - உதயகிரியின் கண் ஏறித் தோன்றுவானாயினான். ( எ - று.) தீவலஞ் செய்தவனைக் காண விரும்பி ஞாயிறு குணதிசையில் வந்து தோன்றினான், என்க. |