(இ - ள்.) நந்திமுகம் - இறைவனுடைய திருவுருவத்தின் கண், புண்ணியநீர் - மங்கலநீராட்டு, நடைமாலை - நடந்தது - நூல்களிற்கூறும் நிகழ்ச்சி முறையானே நடத்தப்பட்டது, புடைமாலை புகுந்தனர் - இடங்கள் தோறும் நிரலாக மக்கள் புகுந்தனர், இடை - நடுவே, மாலை - நிரலாக, ஓர் ஏத்தரவம் - மந்திரமொழி ஓதும் ஓர் இசை, நிகழ்ந்தது - நிகழலாயிற்று, கடைமாலை -இறுதியில், காப்பு அணி நிகழ்ந்தது - காப்பதணிதலாகிய கரணம் நிகழலாயிற்று, (எ - று.) நந்தி - அழிவற்றவன்; அருகன். முகம்: ஏழாவதன் உருபு, புண்ணியநீர் -மங்கலநீராட்டு. காப்பணிதல் - இறுதியில் நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்ச்சி, |