(இ - ள்.) தூமரைமுகத்து அரசர் பலர்சென்று - தூய தாமரைபோலும் மலர்ந்த முகங்களையுடைய மன்னர் பலர் சென்று, தாமரை முகத் தமனியக்குடம் அவற்றால் - தாமரை மலர்போன்ற வாயையுடைய பொன்னாலியன்ற குடங்களால், மரைப்பூ முகத்து எறிதிரைப் புனல் முகந்து - தாமரைப் பூக்களைத தம்பாலுடைய அலையெறியும் கடவுட்புனலை முகந்து கொண்டு, சாமரை முகத்தன மதக்களிறு தம்மேல் - சாமரைகளால் அணியப்பட்ட முகத்தையுடைய யானைகளின் மேற்கொண்டு சூழ்ந்தார் - வந்து மொய்த்தனர், (எ - று.) மன்னர் தமனியக் குடத்தால் கடவுட்புனல் முகந்துகொண்டு முகமகிழ்ச்சியுடனே, களிறுகள் மேலேற்றிக் கொணர்ந்தவர் சூழ்ந்தார், என்க. |