1088.

அங்கணயி ராவணமி ரண்டுடனெ டுத்த
மங்கலம ணிக்கலச நீர்சொரிய வாடிப்
பொங்குதிரை 1யொன்றிருபு 2யற்பொலிய வேந்தித்
தங்கு 3புனல் பெய்ததட மால்வரையொ டொத்தான்.

     (இ - ள்.) அங்கண் அயிராவணம் இரண்டு உடன் எடுத்த - அழகிய
கண்களையுடைய யானைகளிரண்டு ஒருசேர எடுத்த, மணிக்கலச மங்கலர நீர் சொரிய -
மணிகள் பதிக்கப்பட்ட குடங்களின் நிறைந்த கடவுட்டன்மை யுடைய நீரைப் பொழியாநிற்ப,
ஆடி - மங்கல நீராடுதலைச் செய்து, இருபுயல் - இரண்டு முகில்கள், பொங்கு திரை ஒன்று
- மிக்க அலைகளையுடைய கடலின்கட் சேர்ந்து, தங்குபுனல் பொலிய ஏந்தி - அங்குத்
தங்குதலையுடைய நீரை அழகுறச் சுமந்து கொணர்ந்து, பெய்த தடமால்வரை ஒத்தான் -
பொழியப்பட்ட பெரிய மலையை ஒத்துத் தோன்றினான், (எ - று,)

அயிராவணம் - ஒரு கடவுளியானை - அக்கடவுளியானையை ஒத்த யானைகள் என்றபடி,
அயிராவணம் அனைய, இரண்டு யானைகள் ஒருசேர மணிக்கலச நீரைச் சொரிய ஆடிய
நம்பி, இரண்டு மேகங்கள், கடல் முகந்து தன் உச்சியில் ஒருசேரச் சொரியப் பெற்ற, பெரிய
மலையை ஒத்தான் என்க.

( 262 )