சுயம்பிரபை மணமன்றம் புகுதல்

1093.

மங்கலவ னப்பினதொர் கோடிமடி தாங்கி
யங்கொலிவி சும்பினவர் தந்தவணி சேர்த்திப்
பங்கயமு கத்த 5வர்ப லாண்டிசை 6ப ராவச்
செங்கயனெ டுங்கணவள் வேள்விநகர் சேர்ந்தாள்.
 

     (இ - ள்.) மங்கல வனப்பினது ஓர் கோடிமடி தாங்கி - நன்மைமிக்க அழகுடையதாகிய
ஒப்பற்ற புத்தாடையுடுத்து, அங்கு ஒலி விசும்பினவர் - அவ்விடத்தே அமரர்கள், தந்த
அணி சேர்த்தி - கொடுத்த அணிகலன்களை அணிந்து, பங்கய முகத்தவர் - தாமரை
மலர்போன்ற அழகிய முகத்தையுடைய மகளிர்கள், பலாண்டு இசை பரவ பல்லாண்டு பாடி
வாழ்த்தா நிற்ப, செங்கயல் நெடுங்கணவள் - செவ்விய கயல்மீன்போன்ற நெடிய
கண்களையுடைய சுயம்பிரபையும், வேள்விநகர் சேர்ந்தாள் - திருமண வேள்விமன்றத்தை
எய்தினாள், (எ - று,)

நங்கை ஆடையணிந்து கோலங் கொண்டபொழுது, வானவர் மகளிர் தாம் கொணர்ந்த
அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்தனராக, அவற்றையும் அணிந்து வேள்விநகர்புக்காள்,
என்க.

( 267 )