1097.

நான்முகன்வ 4லத்துநல்லி டத்துமொரு காவன்
மேன்முகமி ருந்துகுண பால்வெறுவி தாகப்
பான்முறைப யின்றபரு திக்கடிகை பாய்த்தித்
தான்முறையி னோதுசமி தைத்தொழுதி சார்ந்தான்.

     (இ - ள்.) நான்முகன் வலத்து - நல்லிடத்து - பிரமனுக்குரித்தாகிய
வலப்பக்கத்தினதாகிய சிறந்த இடத்தினும், ஒரு காவல் - ஒரு காப்பு மறைமொழி ஓதியிட்டு,
மேல்முகமிருந்து குணபால் வெறுவிது ஆக - மேற்றிசையினின்றும் கீழ்த்திசைகாறும் வறிதே
கிடக்கவிட்டுப் பின்னர், பால்முறை பயின்ற பருதிக்கடிகை - கூறு கூறாகப் பகுத்துப்
பயின்றனவாகிய
மறைமொழியை ஓதி வேள்வித்தீயை இட்டு, தான் - அவ் வேள்வியாசான், முறையின் ஓது -
முறைப்படி மந்திர மோதுதற்குரிய, சமிதைத் தொழுதி சார்ந்தான் - வேள்வி விறகுத்
தொகுதிகிடந்த இடத்தைஎய்தினன், (எ - று.)

நான்முகனுக்குரிய வலத்ததாகிய நல்லிடம் என்க. காவல் - காப்பு மந்திரம் (ஓதி
என்க) பயின்ற: பெயர். பருதிக்கடிகை. வேள்வித் தீ. சமிதை - வேள்விவிறகு. தொழுதி -
தொகுதி.

( 271 )