கணி முழுத்த வருகை யுணர்த்தல்

1098.

ஆயிடைந 1டுக்கட லுளானமர ராசா
னேயுடைய னாயசுர மந்திரியெ ழுந்தான்
போயுடைவி சும்பின்மதி 2யும்புகுது கின்றான்
மேயுடைய ணிந்தகணி வேலையிது வென்றான்.

     (இ - ள்.) ஆயிடை - அப்பொழுது, நடுக்கடல் உளான் - நடுவணதாகிய
கடலையுடையவனாகிய வருணனும், அமரர் ஆசான் - வியாழனும், ஏயுடையன் ஆய்
அசுரமந்திரி - தன்னோடு நட்புடையனாகிய வெள்ளி, எழுந்துபோய் - பெயர்ந்துபோய்.
உடை விசும்பின் - தனக்குரியதாகிய விசும்பிடத்தே, மதியம் புகுதுகின்றான் - திங்களோடு
சேராநின்றான் ஆதலால், மே யுடைஅணிந்த கணி - சிறப்புடை உடுத்த கணிவன், வேலை
இது என்றான் - மணவேள்வி நிகழ்தற்குதிய முழுத்தம் இஃதென்று வேள்வியாசானுக்
குணர்த்தினான், (எ - று.)

கடலுளான் - வருணன், அமரர் ஆசான் - வியாழன். அசுர மந்திரி - வெள்ளி. மதியம் -
திங்கள். மேயுடை - சிறப்புடை. வேலை - முழுத்தம்.

( 272 )