1101.

கந்துளுமி 2ழுங்கரிய சூழ்புகைகள் விம்ம
வந்துசுட ரேந்திவல னேசுழல மாட்டி
யந்தணனு மங்கழ லமைத்துமிக வேட்டான்
மைந்தனும டந்தையைம னத்தின்மிக வேட்டான்.

     (இ - ள்.) கந்துள் உமிழும் கரிய சூழ்புகைகள் விம்ம - கரியை உமிழ்கின்ற
கரியவாய்ச் சூழ்தலையுடைய வேள்விப் புகைகள் பெருகவும், சுடர் வந்து ஏந்தி வலனே
சுழல மாட்டி - வேள்வித்தீ மிக்கு ஓங்கி வலப்புறத்தே திரிந்து சுழலுமாறும் கொளுவி, அந்தணனும் - வேள்வியாசானும், அங்கு
அழல் அமைத்து வேட்டான் - அவ்விடத்தே தீயோம்பி வேள்வி செய்தான், மைந்தனும் -
திவிட்டநம்பியும், மடந்தையை - சுயம்பிரபையை, தன் மனத்தின் - தன் மனத்தினுள்ளே,
மிக வேட்டான் - மிக விழைவானாயினன், (எ - று.)

கந்துள் - கரிக்கட்டி. அந்தணனும் அங்கு அழல் அமைத்து வேட்டான், மைந்தனும் தன்
மனத்துள்ளே காதலமைத்து வேட்டான் என்க.

( 275 )