1108.

இடிபடு முரசிற் சாற்றி யேற்பவ ராசை தீரச்
சுடர்விடு மணியின் மாரி பொன்னொடு சொரிய வேவிக்
கடிபடு நெடிய மாடங் கன்னியோ டேறி 2னானால்
3முடிவுகொ ளுலக மெய்து மின்பமா மூர்த்தி4யொப்பான்.

     (இ - ள்.) இடிபடும் முரசில் சாற்றி - இடியைப் போன்று முழங்குகின்ற முரசறைந்து
முன்னர் அறிவித்து, ஏற்பவர் - இரவலர்களுடைய, ஆசைதீர - அவாக்கெடும் அளவிற்றாய்,
பொன்னொடு - பொற்றிரளுடனே, சுடர்விடு மணியின் மாரி சொரிய - ஒளிவிடுகின்ற
மணியை மழைபோன்று வழங்குக என்று, ஏவி - அதற்குரியாரை ஏவிவிட்டுப் பின்னர்,
கன்னியோடு - சுயம்பிரபையோடே, கடிபடு நெடிய மாடம் - காவலமைந்த நீண்ட மேனிலை
மாடத்தின் கண்ணே, ஏறினான் - ஏறாநின்றான், (அவன் யாரெனில்) முடிவு கொள் உலகம்
எய்தும் - வினைமுடிவின்கண் எய்தற் பாலதாய வீட்டுலகத்தை எய்திய, இன்ப மாமூர்த்தி
ஒத்தான் - இன்பவடிவத்தையுடைய பெருமைமிக்க அருக பரமேட்டியையே ஒத்தவனாகிய
திவிட்டன் என்பான், (எ - று.)

      கேவலஞானம் என்னும் மடந்தையோடு வீட்டிற்புகும் உயிரை, இன்பமா மூர்த்தி
என்றார் எனினும் ஆம்.

( 282 )